திருச்சி: அதிமுக மாவட்டச் செயலாளருக்குச் சொந்தமான கல்வி நிலையத்தில் ஐ.டி ரெய்டு!

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரான இளங்கோவனுக்குச் சொந்தமான கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

10 – க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மற்றும் திருச்சியில் இருந்து வந்த அதிகாரிகள் அந்த சோதனையை நடத்தி வருகின்றனர்.

அ.தி.மு.க சேலம் புறநகர் மாவட்டச் செயலாளராக இருப்பவர் இளங்கோவன். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரான இளங்கோவன், மாநில கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருந்தவர். எடப்பாடிக்கு நெருக்கமானவர் என்பதால், இவர் சம்பந்தப்பட்ட இடங்களில் ஏற்கெனவே லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். இந்நிலையில், இவருக்கு திருச்சி மாவட்டம், முசிறி அருகே துறையூர் சாலையில் எம்.ஐ.டி. பாலிடெக்னிக் மற்றும் வேளாண் பொறியியல் கல்லூரி என்ற பெயரில் கல்வி நிலையங்கள் உள்ளன. அந்தக் கல்வி நிலையங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

இளங்கோவன்

10 – க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மற்றும் திருச்சியில் இருந்து வந்த அதிகாரிகள் அந்த சோதனையை நடத்தி வருகின்றனர்.

ஓ.பி.எஸ்-ஸுக்கு நெருக்கமானவராக கருதப்படும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் இ.டி சோதனை நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பராகக் கருதப்படுபவருக்குச் சொந்தமான இடத்தில், வருமானவரித் துறையினர் சோதனை நடத்துவது அ.தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.