நாம் ரயிலில் பயணிக்கும்போது இந்திய ரயில்வேத் துறை சார்பாக தூங்குவதற்கான தலையணையும் போர்வையும் வழங்கப்படும். இதை உபயோகிப்பதில் பலருக்கும் எந்த சிக்கலும் இல்லை என்றாலும், சிலர் இவற்றை ஒதுக்கி விட்டு தங்களது சொந்த போர்வையே பயன்படுத்துவர்.
இந்த ரயில்வே போர்வைகள் சரியாக பராமரிக்கப்படுகிறதா என்ற கேள்வி எல்லாருக்கும் எழுந்திருக்கும். இந்தியன் எக்ஸ்பிரஸ் தளம் தகவல் அறியும் உரிமை சட்டம் வழியாக கேட்டதில், இதற்கு விடை கிடைத்திருக்கிறது.
ஏசி பெட்டிகளில் வழங்கப்படும் போர்வைகள், பெட்ஷீட்கள் மற்றும் தலையணை உறைகளுக்கு பயணிகளிடம் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை என்றும், பயணக் கட்டணத்துடனேயே இவற்றுக்கான தொகையும் பெறப்படுகிறது என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறது இந்தியன் ரயில்வே.
கரிப் ரத் மற்றும் துரந்தோ போன்ற சில ரயில்களில், பயணிகள் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணிகள் எக்ஸ்ட்ரா போர்வைகள் உள்ளிட்ட பொருள்களை வாங்கிக்கொள்ளலாம்.
பராமரிப்பு ஊழியர்கள் தெரிவித்ததன்படி, “ஒவ்வொரு பயணத்துக்குப் பிறகும் தலையணை உறைகள், படுக்கை விரிப்புகள் சலவைக்கு எடுத்துச் செல்லப்படும். ஆனால் அழுக்கான போர்வைகள் அப்படியே மடித்து வைக்கப்படும்.” மற்றொரு சீனியர் பராமரிப்பு ஊழியர், “போர்வை தூய்மையாக இருக்கிறதா என்பது குறித்து முறையான கண்காணிப்பு இல்லை. போர்வைகள் பொதுவாக துர்நாற்றம் வீசினால் அல்லது அழுக்கடைந்தால் மட்டுமே சலவைக்கு அனுப்பப்படும்” என்றுத் தெரிவித்துள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், 46 ரயில்வே சொந்த சலவை நிலையங்களும், 25 BOOT (ஒப்பந்த அடிப்படையிலான) சலவை நிலையங்களும் செயல்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
ரயில்வேயின் சலவை நிலையங்கள் அரசுக்கு சொந்தமான நிலத்தில் இருப்பதுடன், சொந்தமான இயந்திரங்களும் உள்ளது. ஆனால் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப்படுகின்றனர். ஒப்பந்த அடிப்படையிலான நிலையங்கள், ரயில்வேக்கு சொந்தமான இடத்திலேயே இருக்கின்றன. ஊழியர்களும் சலவை இயந்திரங்களும் தனியாரால் கையாளப்படுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb