TVK: தவெக நிர்வாகி மறைவு: “ஏன்டா இப்படிப் பண்ண..” – கதறி அழுத்த ஆனந்த்; இரங்கல் தெரிவித்த விஐய்

அக்டோபர் 27-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அக்கட்சியின் நிர்வாகிகள் விக்கிரவாண்டியில் தங்கி மாநாட்டிற்கான வேலைகளைச் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் சரவணன் என்பவரும் கடந்த சில நாட்களாக விக்கிரவாண்டியில் தங்கி மாநாட்டுப் பணிகளைச் செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் விக்கிரவாண்டியிலிருந்து புதுச்சேரியில் உள்ள தன் வீட்டிற்குத் திரும்பிய சரவணன், தனக்கு லேசாக நெஞ்சு வலிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

தவெக

இதனைத் தொடர்ந்து உறவினர்கள் அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுப் பணிகளைக் கவனித்து வந்த மாநிலச் செயலாளர் சரவணன் மாரடைப்பால் உயிரிழந்திருப்பது அக்கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில், த.வெ.க., தலைவர் விஜய் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில், “தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகி, என் மீதும் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மீதும் தீராப் பற்றுக் கொண்டவர். கழகத்திற்காக அயராது ஓடோடி உழைத்த கழகப் போராளி புதுச்சேரி திரு. சரவணன் அவர்கள் திடீர் உடல்நலக் குறைவால் காலமானது அதிர்ச்சியையும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது.

அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

சரவணனின் இறுதிச்சடங்கிற்குச் சென்ற தமிழக வெற்றிக் கழகப் பொதுச்செயலாளர் ஆனந்த், அவரது உடலைப் பார்த்துக் கதறி அழும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “ஏன்டா இப்படிப் பண்ண, 5 நிமிஷத்துல வரேன்னு சொன்னியே டா..” என உடைந்து ஆனந்த் அழுகிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs