Britney Spears: “நான் வாழ்வில் செய்த சிறந்த காரியம்..” – தன்னைத்தானே திருமணம் செய்த பாடகி ஸ்பியர்ஸ்

அமெரிக்காவின் பிரபல பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ். சிறுவயதிலேயே பொது நிகழ்ச்சிகளில் பாடத் தொடங்கிய ஸ்பியர்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களிலும் நடித்து வந்தார். இதற்கிடையில் ஈரானிய-அமெரிக்க நடிகரும் உடற்பயிற்சி பயிற்றுநருமான சாம் அஸ்காரியை 2016-ம் ஆண்டு சந்தித்தார். அதனைத் தொடர்ந்து இந்த ஜோடி 2021-ம் ஆண்டில் திருமண நிச்சயதார்த்தம் செய்து, 2022-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், கடந்த ஆண்டு இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் பிரிவதாக அறிவித்தனர்.

Britney

அது தொடர்பாக சாம் அஸ்கரி தன் சமூகவலைத்தளப் பக்கத்தில், “ஆறு ஆண்டுகள் ஒருவருக்கொருவர் அன்பு மற்றும் அர்ப்பணிப்புக்குப் பிறகு, நானும் என் மனைவியும் ஒன்றாகச் செய்த இந்தப் பயணத்தை முடிக்க முடிவு செய்தோம். நாங்கள் ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் அன்பையும், மரியாதையையும் நாங்கள் கடைப்பிடிப்போம். அவருக்கு எப்போதும் நான் சிறந்தவராக இருக்க விரும்புகிறேன்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில்தான் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் திருமணக் கோலத்திலிருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கிறார்.

அந்தப் படத்தில், “இது என்னை நானே மணந்து கொண்ட நாள். இந்த நாளை திரும்பக் கொண்டுவருவதில் எனக்குச் சங்கடமாகவோ, முட்டாள்தனமாகவோ தெரியவில்லை. என் வாழ்வில் நான் செய்த மிகச் சிறந்த காரியம் நான் என்னை மணந்த நாள். அதை மீண்டும் கொண்டு வருவது சங்கடமாகவோ அல்லது முட்டாள்தனமாகவோ தோன்றலாம், ஆனால் இது நான் செய்த மிகச் சிறந்த காரியம்” எனப் பதிவிட்டிருக்கிறார். தற்போது இந்தப் பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX