தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “தொட்டுக்கூடப் பார்க்க முடியாது..” – உதயநிதி ஸ்டாலின் சொல்வது என்ன?

“நேரடியாக இந்தியைத் திணிக்க முடியாததால் தமிழ்த்தாய் வாழ்த்தில் சில சொற்களை நீக்குகின்றனர்” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

தூர்தர்ஷன் தமிழ் சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் அதன் பொன்விழா ஆண்டு கடந்த வாரம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியோடே, இந்தி மாத நிறைவுக் கொண்டாட்டங்களும் நடத்தப்பட்டன. இதில், ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார். இவ்வாறிருக்க நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, `தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரி வரும்போது அதை மட்டும் புறக்கணித்துவிட்டு அடுத்த வரியிலிருந்து பாடலைப் பாடிய சம்பவம் பெரும் விவாதப்பொருளாக மாறியது.

உதயநிதி ஸ்டாலின்

பல அரசியல் தலைவர்கள் இந்த செயலுக்கு எதிராக தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலினிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலளித்த அவர், ” தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடத்தை நீக்கச் சிலர் கிளம்பியுள்ளனர். தி.மு.க.,வின் கடைசி தொண்டன், தமிழன் இருக்கும் வரை தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது. தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்க பல்வேறு வகைகளில் முயற்சி செய்கின்றனர். நேரடியாக இந்தியைத் திணிக்க முடியாததால் தமிழ்த்தாய் வாழ்த்தில் சில சொற்களை நீக்குகின்றனர்” என்று தெரிவித்திருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb