“இந்த தேதிகளில் ஏர் இந்தியா விமானத்தில் செல்லாதீர்கள்” – காலிஸ்தான் தீவிரவாதி விடுத்த மிரட்டல்!

காலிஸ்தானி தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன். நவம்பர் 1ம் தேதி முதல் 19ம் தேதி வரை ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.

பன்னூன் குறிப்பிட்ட தேதிகளில் காலிஸ்தான் இனப்படுகொலையின் 40-வது ஆண்டு நினைவும் சரியாக பொருந்திவருகிறது. அந்த தேதிகளில் ஏர் இந்தியா விமானங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று பன்னூன் கூறியிருக்கிறார்.

நீதிக்கான சீக்கியர் அமைப்பின் (Sikhs For Justice – SFJ) நிறுவனரான பன்னூன், கடந்த ஆண்டும் இதேத் தேதிகளில் இதேப் போன்ற எச்சரிக்கைகளை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏர் இந்தியா விமானம்

கடந்த சில நாள்களாக இந்தியாவின் பல ஏர்லைன்களைச் சேர்ந்த பல விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. அக்டோபர் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரையிலான ஒரு வாரத்துக்குள் ஏர் இந்தியா, விஸ்தாரா, இண்டிகோ, ஆகாசா என பல முன்னணி ஏர்லைன்களைச் சேர்ந்த 90 விமானங்களுக்கு வெடி குண்டு மிரட்டல்கள் வந்துள்ளன.

மிரட்டல்கள் அனைத்தும் வெறும் புரளியாக இருந்தாலும், விமான போக்குவரத்தில் இது பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியா – கனடா நாடுகள் உறவு நாளுக்குநாள் மோசமடைந்து வரும் தருணத்தில் இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக கனட பிரதமர் குற்றம் சுமத்தியது முதல் இந்தியா – கனடா உறவு விரிசலடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா கனடாவில் இருக்கும் காலிஸ்தான் ஆதரவாளர்களை குறிவைப்பதாக கனட அரசு குற்றம்சாட்டி வருகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் 19-ம் தேதி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்துக்கு மிரட்டல் விடுத்தார் குர்பத்வந்த் சிங் பன்னூன். UAPA, மத அடிப்படையில் பிரிவினையைத் தூண்டுதல், குற்ற சதிகளில் ஈடுபடுதல் என பல பிரிவுகளில் அவர் மீது புகார்களை அடுக்கியிருக்கிறது தேசிய புலனாய்வு முகமை.

Sikhs for Justice (SFJ)-யின் பொது ஆலோசகர் குர்பத்வந்த் சிங் பன்னூன்

2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்துவதாக மிரட்டல் விடுத்தார் பன்னூன். டிசம்பர் 11ம் தேதி 2001ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த குடியரசு தினத்தன்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் மாநில காவல்துறை தலைமை இயக்குனர் கவுரவ் யாதவ் ஆகியோரை கொலை செய்யப்போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

SFJ அமைப்பு இந்தியாவிலிருந்து சீக்கியர்களுக்கான தனி நாடு உருவாக வேண்டும் என்று குரலெழுப்பி வருகிறது. இதனால் இந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு குர்பத்வந்த் சிங் பன்னூனை தீவிரவாதியாக அறிவித்தது வெளியுறவுத்துறை அமைச்சகம்.

முன்னாள் RAW அதிகாரியை தேடப்படும் குற்றவாளியாக FBI வெளியிட்டுள்ள போஸ்டர்

குர்பத்வந்த் சிங் பன்னூன் அமெரிக்கா, கனடா என இரண்டு நாடுகளிலும் குடியுரிமை பெற்ற குடிமகனாக உள்ளார்.

SFJ-வை வழிநடத்தும் பன்னூனைக் கொலை செய்ய முயற்சித்ததாக முன்னாள் இந்திய RAW-அதிகாரி விகாஸ் யாதவ் என்பவரைத் தேடி வருகிறது அமெரிக்க விசாரணை அமைப்பான FBI. இதற்காக விகாஸை ‘wanted’ பட்டியலில் வைத்து போஸ்டர்களும் வெளியிட்டிருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb