உலக நாடுகளில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக சீனா இருந்தது. இந்நிலையில், 2023-ல் UNFPA -இன் உலக மக்கள்தொகை அறிக்கையின்படி, சீனாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முந்தியது. சீனாவில் இளைஞர்களின் எண்ணிக்கையை விட முதியவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், சீனாவின் எதிர்காலம் சிக்கலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சீனாவின் மக்கள்தொகை சரிவால் ஏற்படும் சிக்கல்களைச் சமாளிக்க, சீனா அரசு ஒரு குழந்தை மட்டும்தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கொள்கையைக் கடந்த 2016-ம் ஆண்டு திரும்பப்பெற்று, இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்தது.
அதைத் தொடர்ந்து, 2021-ல் அனைத்து திருமணமான தம்பதிகளும் மூன்று குழந்தைகளை வரை பெற்றுக்கொள்ளலாம் என உத்தரவிட்டது. தற்போது இதே போன்ற சிக்கல் ஆந்திர மாநிலம் எதிர்கொள்வதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக, அமராவதியில் நடந்த ஒரு அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், “இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ளவர்கள் மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அனுமதி என்ற சட்டத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறேன்.
ஏனென்றால், ஜப்பான், சீனா போன்ற நாடுகள் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் இளைஞர்களை விட வயதானவர்கள் அதிகமாக இருப்பதால், அதன் விளைவுகளை எதிர்கொள்கின்றன. அதே போலத்தான், தென்னிந்தியாவில், குறிப்பாக ஆந்திரப் பிரதேசத்தில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் ஏற்படும் நெருக்கடியின் அறிகுறிகள் கூடிக்கொண்டே வருகின்றன. 2047 வரை மக்கள்தொகையில் இளைஞர்கள், முதியவர்களின் சராசரி விகிதத்தை இந்தியா சமன்செய்தாலும், நாட்டின் தெற்குப் பகுதிகள் ஏற்கனவே வயதான மக்கள்தொகையின் விளைவுகளைக் காணத் தொடங்கியுள்ளன.
ஆந்திரா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள இளைஞர்கள் கிராமங்களிலிருந்தும் நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் இடம்பெயர்கிறார்கள். முதியவர்கள் மட்டுமே கிராமங்களில் வசிக்கின்றனர். எனவே அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதால், எதிர்வரும் ஆண்டுகளில் அதிக துடிப்பான இளைய சமூகத்தை உருவாக்க முடியும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY