திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டை அருகே கடந்த 11-ம் தேதி கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து தர்பங்காவிற்கு செல்ல இருந்த ‘பாக்மதி எஸ்பிரஸ்’ ரயில் விபத்திற்குள்ளாகி இருந்தது.
லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியதில் விபத்து ஏற்பட்டது, உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் ஏசி பெட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பெட்டிகள் தடம் புரண்டது. சுமார் 19-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த விபத்திற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக தொடர்ச்சியாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் லூப் லைனின் சந்திப்பில் உள்ள போல்ட் நட்டுகள் கழற்றப்பட்டுக் கிடந்ததுதான் இந்த விபத்துக்கு காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் லூப் லைனின் போல்ட் நட்டுகள் சதிச் செயல் காரணமாக கழட்டப்பட்டதா? என்ற கேள்விகள் இருந்து. இந்நிலையில் திட்டமிடப்பட்டு லூப் லைனின் போல்ட் நட்டுகள் கழற்றப்பட்டதாக விசாரணையில் தெரியவந்திருக்கிறது. ஏற்கெனவே நான்கு பிரிவுகளில் இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
உயிருக்கு அல்லது உடலுக்கு காயத்தை ஏற்படுத்துவது 125a, 125b, அதிவேகமாக இயக்குதல்-281, ரயில்வே பாதுகாப்பு சட்டம்-154 ஆகிய சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் விசாரணை முடிவில் போல்ட் நட்டுகள் திட்டமிட்டு கழற்றப்பட்டுள்ளதால் இது சதிச் செயல் காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என்ற பிரிவில் இந்திய ரயில்வே சட்டத்தின் 150வது பாதுகாப்பு சட்டப்பிரிவு தற்போது சேர்க்கப்பட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY