தூர்தர்ஷன் தமிழ் சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டங்களுடன் இந்தி மாத கொண்டாட்டங்களின் நிறைவு விழாவும் இன்று நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியானபோதே தமிழக அரசியல் தலைவர்கள் பலரும், இந்தியைத் திணிப்பதா என மத்திய அரசைக் கண்டித்தனர். இருப்பினும், இன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தி மாத கொண்டாட்டங்களின் நிறைவு விழாவும் நடைபெற்றது.
இவையனைத்துக்கும் மேலாக, ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது, `தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரி வரும்போது அங்கு சிறு குழப்பம் ஏற்பட அந்த வரியைத் தவிர்த்துவிட்டு அடுத்த வரியிலிருந்து பாடினர். இதனால், வேண்டுமென்றே திராவிடம் வரும் வரியை புறக்கணித்துவிட்டு தமிழ்த்தாய் வாழ்த்தை ஆளுநர் அவமதித்திருக்கிறார் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், `திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா?’ என முதல்வர் ஸ்டாலின் சாடியிருக்கிறார். இது குறித்து எக்ஸ் தளத்தில் ஸ்டாலின், “ஆளுநரா? ஆரியநரா? திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்.
சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர். இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர். திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா?
தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்” என்று ட்வீட் செய்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb