விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நேற்று அ.தி.மு.க மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் முன்னாள் அமைச்சர் ரஜேந்திர பாலாஜி கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், “மக்களை சந்தித்து அண்ணா தி.மு.க-வை ஆரம்பித்தவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர் எங்கே? ‘இன்னைக்கு சுள்ளான்கள் எல்லாம் வந்து அடுத்த எம்.ஜி.ஆர்னு சொல்றாங்க’. அடுத்து நான்தான் என்றும் சொல்கிறார்கள். ஒரு காலமும் நடக்காது.
இது திராவிட பூமி. தி.க, அடுத்து தி.மு.க, அடுத்து அ.தி.மு.க இதுதான் நிலைமை. இங்கு நடந்துகொண்டிருக்கும் போரில் யாருக்கு சண்டை என்றால் தி.மு.க-விற்கும் அ.தி.மு.க- விற்கும்தான்.
இந்தப் போரில் பா.ஜ.கவும் கிடையாது. காங்கிரஸும் கிடையாது. புதிதாக கட்சி ஆரம்பிப்பவர்கள் எல்லாம் ஒரு 30 நாளைக் கூட தாண்ட மாட்டார்கள். அவர்களை போரை சந்திக்க முடியாது. பிரச்னைகளை சந்திக்க முடியாது” என்று பேசியிருக்கிறார். ராஜேந்திர பாலாஜி மறைமுகமாக விஜய்யைதான் சாடி இருக்கிறார் என்று நெட்டிசன்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
தொடர்ந்து அதே நிகழ்வில் பேசிய அவர், ” ஸ்டாலினை வீட்டுக்கும், எடப்பாடி பழனிசாமியை ஆட்சிக்கும் அனுப்ப வேண்டும் என்றால் அது அதிமுகவால் தான் முடியும். கலைஞர், ஸ்டாலின், உதயநிதி அடுத்து இன்பநிதி என திமுகவில் ஜனநாயகமே இல்லாமல் வாரிசுகள் பதவிக்கு வரும் மன்னராட்சி நடைமுறை உள்ளது.
ஆனால் அதிமுகவில் ஒன்றிய செயலாளர் பதவியில் இருந்து படிப்படியாக உயர்ந்து இன்று கட்சியின் பொதுச்செயலாளர் ஆகியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அ.தி.மு.க-வில் மட்டும் தான் உழைப்புக்கு மரியாதை இருக்கிறது.” என ராஜேந்திர பாலாஜி பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY