ஜேன் ஜூய் (Jane xue )என்பவர் தனது இரண்டு வயதான சாமோட் (samoyed) வகை வளர்ப்பு நாய் ஒன்றுக்கு ஓகே(ok)என பெயர் வைத்து அதனை தென்கிழக்கு சீனாவில் உள்ள `பெட் கஃபேவுக்கு செப்டம்பர் மாதத்தில் முதல் நாளாக வேலைக்கு அனுப்பினார். இதனை அவர் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது போல் உணர்வதாக கூறியுள்ளார். `ஓகே’ மற்ற நாய்களுடன் விளையாடும் பொழுது தனிமை மறந்து வேறு வாழ்க்கை அனுபவிக்கவே தான் இப்படி செய்ததாகவும் ஜான் கூறியுள்ளார் .
பெட் கஃபேக்கள் சீனாவில் ஒரு பெரிய வணிகமாக மாறி வருகிறது. பார்வையாளர்கள் கடையில் சுற்றித் திரியும் விலங்குகளுடன், நேரம் செலவளிப்பதை விரும்புகிறார்கள். இந்த அனுபவத்திற்காக கஃபே உரிமையாளர்களால் அதிக கட்டணம் வசூலிக்க படுகிறது.
சீனாவில் செல்லப்பிராணிகளை விரும்புபவர்கள் அதிக அளவு உள்ளனர் .செல்லப் பிராணிகளுடன் நேரம் செலவிட விரும்பும் சீனர்கள், கஃபே செல்லும்போது, அங்குள்ள செல்லப் பிராணிகளுடன் ரிலாக்ஸ் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்கள். இதனாலே பெட் கஃபே சீனாவில் ஒரு மிகப்பெரிய வணிகமாக மாறியுள்ளது. சீனாவில் பூனை மற்றும் நாய் கஃபேகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் ஒரு நபருக்கு 30 முதல் 60 யுவான் ($4.85)வரை நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும் அல்லது குறைந்தபட்சம் காபி போன்றவற்றை ஆர்டர் செய்ய வேண்டியது அவசியமானது.
கஃபேவில் தங்களின் செல்ல நாய் உடன் நிறைய தோழர்கள் விளையாடுவதோடு உரிமையாளரான ஜூய்க்கும் பணம் செலவு ஆவது குறைந்துள்ளது. ஏனெனில் நாய்யை தனியாக வீட்டில் விட்டால் நாள் முழுவதும் ஏ.சி இணைக்க வேண்டியதாக இருக்கிறது. அதுவே கஃபே செல்வதால் மின்சாரம் மிச்சம்.
மற்றொரு பெண், தன்னிடம் பூனை இருப்பதாகவும், அதனை வேலைக்கு அனுப்ப தயாராக இருப்பதாகவும் Resume பகிர்ந்துள்ளார். இதனை பார்க்கும் பெட் கஃபே ஓனர்கள் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளார்.
செல்ல பிராணிகளான நாய் மற்றும் பூனைகள் தங்களது வேலை நேரம் முடிந்த பிறகு மனிதர்களைப் போலவே தங்களது வீட்டிற்கு சென்று விடும். பெட் கஃபே உரிமையாளர்களுக்கும் செல்ல பிராணிகளை சொந்தமாக பராமரிக்க தேவையில்லை என்பதால், அவர்களும் இதனை விரும்புகிறார்கள். நாய் மற்றும் பூனைகள் வேலைக்கு சென்று சம்பளம் வாங்குவது சற்று வேடிக்கையாக இருந்தாலும், சீனாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் குழந்தைகளை விட செல்ல பிராணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.