அனைத்துத் துறைகளிலும் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில், அதே தொழில்நுட்பம் மூலமாக நடைபெறும் மோசடிகளும் அதிகரித்து வருகிறது.
முக்கியமாக நமது பணப் பரிமாற்றத்துக்கும், வங்கி கணக்கின் தகவல்களை நாம் மட்டுமே பாதுகாப்பாகப் பயன்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டது, OTP(One Time Password). தனிநபருக்கு sms மூலமாகவோ, மெயில் மூலமாகவோ அனுப்பப்படும் இந்த OTP ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் இதன் மூலம் நடைபெறும் மோசடிகளின் எண்ணிக்கை தற்போது பெருகி வருகிறது.
OTP மோசடிகள் அரங்கேறும் வழிகள்:-
1. சட்டப்படியான நிறுவனத்தில் இருந்து வரும் மின்னஞ்சல், அழைப்புகள் போல் பேசி உரிய நிறுவனத்தின் நுகர்வோர்களின் தகவல்களை அறிந்துக் கொள்வது
2 . ‘உங்கள் வங்கிக் கணக்கில் பிரச்னை உள்ளது, அதை உடனே சரி செய்வதற்கு OTP தேவைப்படுகிறது’ என்று போலி அழைப்புகள் வழியாக மோசடி செய்தல்.
3. OTP -ஐ பகிர்ந்துக் கொள்ள வலியுறுத்துதல் வாயிலாக மோசடிகள் அரங்கேற்றுதல்.
OTP மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு:-
1 . மோசடி அழைப்புகள் மற்றும் மெயில்களில் எச்சரிக்கையாக இருங்கள்.
2 . மெயிலுக்கு பதில் அனுப்புவதற்கு முன்பாகவும், லிங்க்குகளுக்குள் செல்வதற்கு முன்பாகவும் அவற்றை அனுப்பியவரின் தகவல்களை இருமுறை சரிபார்த்தப்பின் செயல்படுங்கள்.
3 . எக்காரணத்திற்காகவும் OTP- ஐ பகிராதீர்கள். சட்டப்படியான நிறுவனங்கள் யாவும் ஒருபோதும் OTP- ஐ பகிரச்சொல்லிக் கேட்க மாட்டார்கள்.
4 . உங்கள் வங்கி கணக்கிற்கு ஒரு கடினமான கடவுச்சொல்லை வைத்துக்கொள்ளுங்கள். மேலும் இரண்டு-படி சரிபார்ப்பு வசதியையும் அமைத்துக் கொள்ளுங்கள்.
5 . ஏதேனும் நிறுவனத்தின் பெயரில் மோசடி அழைப்பைத் தாங்கள் பெற்றால் அந்த குறிப்பிட்ட நிறுவனத்திடம் புகார் கொடுங்கள்.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமாக OTP மோசடிகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.