ஜம்மு – காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்குப் பிறகு முதல் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் தேசிய மாநாடு கட்சி வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. ஜம்மு காஷ்மீரின் முதல்வராக தேசிய மாநாடு கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லாவும், ஜம்மு – கஷ்மீரின் துணை முதவ்லராக சுரீந்தர் சவுத்ரியும் பதவியேற்றுக்கொண்டார். துணை முதல்வர் சுரீந்தர் சவுத்ரி முன்பு பா.ஜ.க-விலும், மெஹபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியிலும் இருந்தவர். அதைத் தொடர்ந்து, தேசிய மாநாடு கட்சியில் இணைந்து, ஜம்மு பிராந்தியத்தின் நவ்ஷேரா தொகுதியில், ஜம்மு – காஷ்மீரின் பா.ஜ.க தலைவர் ரவீந்தர் ரெய்னாவை எதிர்த்து தேர்தலைச் சந்தித்தார்.
இதே தொகுதியில், 2014-ம் ஆண்டு பா.ஜ.க சார்பில் ரவீந்தர் ரெய்னா – மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் சுரீந்தர் சவுத்ரி போட்டியிட்டனர். அப்போது சுமார் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட ரவீந்தர் ரெய்னா வெற்றிப்பெற்றார். எனவே இந்தத் தொகுதியில் யார் வெற்றிப்பெறப் போவது என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில், ஜம்மு – காஷ்மீரின் பா.ஜ.க தலைவர் ரவீந்தர் ரெய்னாவை 7,819 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது சுரீந்தர் சவுத்ரி வெற்றிப்பெற்றார். இந்த நிலையில்தான் அவர் துணை முதல்வராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அவரைத் தொடர்ந்து, காஷ்மீரைச் சேர்ந்த ஷாகினா மசூத், ஜாவேத் தர், ஜம்முவைச் சேர்ந்த ஜாவேத் ராணா ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். மீதமிருக்கும் அமைச்சர் பதவிகளும் விரைவில் நிரப்பப்படும் என ஒமர் அப்துல்லா தெரிவித்திருக்கிறார். இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த ஜம்மு – காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, “இந்த அரசாங்கத்தில் எங்கள் குரலோ, பிரதிநிதிகளோ இல்லை என்று ஜம்மு மக்கள் கருதிவிடக் கூடாது. அந்த எண்ணத்துக்கு அனுமதிக்க மாட்டோம் என்று நான் கூறியிருந்தேன்.
ஜம்மு பிராந்தியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலும், ஜம்மு மக்களுக்காக குரல் கொடுக்கவும் சுரீந்தர் சவுத்ரியை துணை முதல்வராகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். அனைவரையும் உள்ளடக்கி அழைத்துச் செல்வதே எங்கள் முயற்சியாக இருக்கும். ஜம்முவில் இருந்து ஒரு துணை முதல்வரைத் தேர்ந்தெடுத்துள்ளேன். அதனால் ஜம்மு மக்கள் இந்த அரசாங்கம் தங்களுக்கு சொந்தமானது என்று உணர வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.