இந்த கொலையில் இந்திய தூதரக அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதாக கனடா தெரிவித்திருந்த நிலையில், இந்தியாவில் இருந்த கனட அதிகாரிகளை வெளியேற உத்தரவிட்டதுடன், கனடாவில் இருந்தும் தூதரக அதிகாரிகளைத் திரும்பப் பெற்றிருக்கிறது இந்திய அரசு.
ஒட்டாவாவில் உள்ள ‘கூட்டாட்சி தேர்தல் செயல்முறைகள் மற்றும் ஜனநாயக நிறுவனங்களில்’ (Federal Electoral Processes and Democratic Institutions) வெளிநாட்டு தலையீடு பற்றிய பொது விசாரணையில் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த கருத்துகளுக்கு, இந்தியா பதிலளித்துள்ளது.
கனடா மண்ணில் நடந்த காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த ஹர்மந்தீப் சிங் நிஜார் கொலைவழக்கில் இந்தியாவைத் தொடர்புபடுத்தும் வலிமையான ஆதாரம் தங்களிடம் இல்லை என அந்த விசாரணையில் சாட்சியமளித்த ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார்.
ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த கருத்துகளை ஒட்டி, மீடியாக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெஸ்வால், “இதுநாள் வரை நாங்கள் தெரிவித்துவந்த கருத்துகளையே கனடா இன்று உறுதிபடுத்தியிருக்கிறது. இந்தியா மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு எதிராக அவர்கள் வைத்த கடுமையான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் விதமாக எந்தவொரு ஆதாரத்தையும் எங்களிடம் காட்டவில்லை.
கனடா – இந்தியா நாடுகளின் உறவில் ஏற்பட்டுள்ள பெரும் விரிசலுக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மட்டுமே பொறுப்பு” எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
காலிஸ்தான் ஆதரவாளரான ஹர்தீப் சிங் நிஜார் படுகொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த கருத்துகள் இருநாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த கொலையில் இந்திய தூதரக அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதாக கனடா தெரிவித்திருந்த நிலையில், இந்தியாவில் இருந்த கனட அதிகாரிகளை வெளியேற உத்தரவிட்டதுடன், கனடாவில் இருந்தும் தூதரக அதிகாரிகளைத் திரும்பப் பெற்றிருக்கிறது இந்திய அரசு.
மேலும், கனடா தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இத்தகைய குற்றச்சாட்டுகளை வைக்கிறார் என்றும் இந்தியா குற்றம்சுமத்தியிருக்கிறது.