இந்தியாவின் 50-வது தலைமை நீதிபதியாக பதவியேற்ற நீதிபதி சந்திரசூட் அவர்களின் பதவிக்காலம் வரும் நவம்பர் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், கடந்த வாரம் உத்யோகப்பூர்வ பயணமாக பூடான் சென்ற நீதிபதி சந்திரசூட், லியோன்போ சோக்யால் டாகோ ரிக்ஜினை சந்தித்து, அண்டை நாடுகளுக்கிடையே இருதரப்பு நீதித்துறை ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தார். இரு நாடுகளுக்கும் இடையேயான நீதித்துறை மற்றும் சட்ட ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்திடுவதற்கு இரு தரப்பு தலைமை நீதிபதிகளும் தலைமை தாங்கினர்.
அதைத் தொடர்ந்து, பூடானில் உள்ள ஜிக்மே சிங்யே வாங்சுக் சட்டப் பள்ளியின் மூன்றாவது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, “நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீதிபதிகள், மக்கள் பிரதிநிதிகள், அறங்காவலர்கள் மட்டுமே அரசியல் அதிகாரத்தை வைத்திருக்கிறார்கள் என்பது பொது நம்பிக்கை கோட்பாட்டின் சாராம்சம். மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்பட்ட அரசியல் அதிகாரம், மக்களுக்கு வளங்கள் எவ்வாறு விநியோகிக்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும். அந்த விநியோகம் நியாயமானதாகவும், சமநிலையானதாகவும் இருப்பதை உறுதி செய்வது நீதி துறையின் பொறுப்பாகும்.
நீதிபதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள்தான். ஆனால், ஜனநாயக கோட்பாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடனும், அவர்களின் பணிகளின் பொறுப்புக்கூறலுடனும் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். எங்களின் பொது நம்பிக்கை, நீதித்துறையின் நம்பகத்தன்மைக்கு மையமாக இருக்கிறது. நீதித்துறை பொது கருத்துக்களிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அதே நேரம், நமது சுதந்திரத்திற்கு உள்ளார்ந்த பொது நம்பிக்கை, நியாயத்தை வழங்குவதாகவே இருக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.