கௌரி லங்கேஷ் கொலை வழக்கு: ஜாமீனில் வந்தவர்களுக்கு மாலை மரியாதை; பாராட்டு விழா… பின்னணி இதுதான்!

கர்நாடக மாநிலத்தைச்‌ சேர்ந்த பெண் பத்திரிகையாளரான 54 வயதுடைய கௌரி லங்கேஷ் என்பவரை அவரது வீட்டருகிலேயே ஒரு கும்பல் கடந்த 2017- ம் ஆண்டு செப்டம்பர் 5- ம் தேதி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தது.

மத அடிப்படை வாதிகளால் இந்த கொலை நிகழ்த்தப்பட்டதாகக் கூறி நாடு முழுவது சர்ச்சையைக் கிளப்பியது. பெரிய அளவிலான அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறி கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த கொலை வழக்கில் குற்றம்சாட்டுள்ள பரசுராம், மனோகர் யாதவ் உள்ளிட்ட 6 பேருக்கும் கடந்த 9 – ம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

கௌரி லங்கேஷ்

சிறையில் இருந்து நிபந்தனை அடிப்படையில் வெளியில் வந்த 6 பேரும் விஜயபுராவில் உள்ள சத்ரபதி சிவாஜி சிலைக்கு கடந்த 11 – ம் தேதி மாலை அணிவித்துள்ளனர். இவர்களின் வருகையை எதிர்பார்த்து திரண்டிருந்த சில இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் `பாரத் மாதா கி ஜே’ என்றும் சனாதன தர்மத்தை ஆதரித்தும் கோஷங்களை முழங்கினர். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், 6 பேரையும் அழைத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடத்தியிருக்கிறது இந்து அமைப்புகளில் ஒன்றான ஹனுமன் சேனா.

பெண் பத்திரிகையாளரை சுட்டுக்கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டு, சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தவர்களுக்கு மாலை, சால்வை அணிவித்து பாராட்டி விழா எடுத்திருக்கும் விவகாரம் ஆளுங்கட்சி தரப்பில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb