கோவை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் வெள்ளம் போல சேர்ந்து, இயல்பு வாழ்க்கையை பாதிக்கப்பட்டுள்ளது.

சாலைகளிலும் ஆங்காங்கே மழை நீர் காட்டாற்று வெள்ளம் போல செல்வதால், போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார்.
கதிரவன் கார்டன் பகுதியில் ஆய்வு செய்துவிட்டு, செந்தில் பாலாஜி புறப்பட தயாரானார். அப்போது அந்தப் பகுதி மக்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். “உள்ளே 50 வீடுகள் உள்ளன. மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்.
25 ஆண்டுகளாக இந்தப் பிரச்னை தொடர்கிறது. யாருமே இதற்கு தீர்வு கொடுக்கவில்லை. நீங்கள் உள்ளே வந்து பாருங்கள். அப்போதுதான் பிரச்னை குறித்து புரிந்துகொள்ள முடியும். தண்ணீர் உள்ளே வந்து சேதம் ஏற்படுத்தியுள்ளது.
இங்குள்ள பாலம் மிகவும் பலவீனமாக இருக்கிறது. கேரளாவில் இருந்து சட்டவிரோதமாக வந்து மருத்துவக் கழிவுகளை கொட்டி செல்கின்றனர். உங்கள் நிர்வாகிகளிடம் கூட அதிகமுறை மனு கொடுத்துள்ளோம். எங்களிடம் உள்ள ஆவணங்களை விட, அவர்களிடம் அதிக ஆவணங்கள் கொடுத்துள்ளோம்.

தயவு செய்து எங்கள் பகுதிக்கு வந்து பாருங்கள்.” என்று கோரிக்கை வைத்தனர். அதன்பிறகு செந்தில் பாலாஜி அங்கு சென்று பார்வையிட்டு, பிரச்னைக்கு தீர்வளிப்பதாக உறுதியளித்து சென்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs