Mysuru Dasara: வாகன ஊர்வலத்தில் பெரியார் படம்; முதல்வரை மன்னிப்பு கேட்கச் சொன்ன பாஜக; பின்னணி என்ன?

உலக அளவில் சிறப்பு வாய்ந்த திருவிழாக்களில் ஒன்றான மைசூரு தசரா திருவிழா நேற்று முன்தினம் இரவு நிறைவடைந்தது. கடந்த 10 நாட்களாக அரசு விழாவாக நடைபெற்று வந்த தசரா திருவிழாவின் மிக முக்கிய விழாவான ஜம்போ சவாரி எனப்படும் 750 கிலோ தங்க அம்பாரியில் யானை மீது சாமுண்டீஸ்வரி அம்மன் காட்சியளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (அக்டோபர் 12) மாலை நடைபெற்றது. லட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்த இந்த நிகழ்வில் மலர் தூவி யானை பவனியைத் தொடங்கி வைத்தார் கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா.

ஜம்போ சவாரி

அதற்கு முன்னதாக, கர்நாடக மாநிலத்தின் சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்ட சிறப்பு வாகனங்களின் அணிவகுப்பையும் முதல்வர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். புத்தர், அம்பேத்கர் சிலை மற்றும் படங்கள் இருந்த வாகனம் ஒன்றில் பெரியாரின் படமும் இடம்பெற்றிருந்தது. கர்நாடகாவைச்‌ சேர்ந்த இந்து சமய மக்களைப் புண்படுத்திவிட்டதாகவும், இதற்குப் பொறுப்பேற்று முதல்வர் சித்தராமையா மற்றும் கர்நாடகா மாநில கலாச்சாரத் துறை அமைச்சர் ஆகியோர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜ.க., நிர்வாகிகள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய இணை அமைச்சரும் கர்நாடக மாநிலத்தின் விஜயப்புரா சட்டசபை தொகுதி பா.ஜ.க., சட்டமன்ற உறுப்பினருமான பசனகவுடா பட்டீல், “தசரா திருவிழாவில் பெரியாரின் படத்தை இடம்பெறச் செய்து, பெருமைப்படுத்துவதாக எண்ணிய சித்தராமையா அரசு, கர்நாடகா மக்களையும் சாமுண்டீஸ்வரியையும் அவமானப்படுத்தியிருக்கிறார்கள். இந்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

பெரியார் படம்

இந்து மத மரபுகளையும் பழக்கவழக்கங்களை அவமானமாகப் பேசிய பெரியாரைப் பெருமைப்படுத்திய செயலுக்காக மாநில முதல்வர் சித்தராமையா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் ஆகிய இருவரும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். சரணாரு மற்றும் தாசருவின் பூமியாகக் கர்நாடகா இருக்க வேண்டும். பெரியார் மற்றும் அவரைப் பின்பற்றுவோரின் பூமியாக இருக்கக் கூடாது” எனத் தெரித்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY