பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்று (அக்டோபர் 14) பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது முனைவர் பட்டம் பெற வந்த பிரகாஷ் என்பவர் மேடையில் வைத்து ஆளுநர் ரவியிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில் பி.ஹெச்.டி., மாணவர்களிடம் பேராசிரியர்கள் பணம் கேட்கிறார்கள், வீட்டு வேலைகளைச் செய்யச் சொல்கிறார்கள் எனக் கூறியிருந்தார்.
மேலும், மாணவர் விடுதிகளில் அடிப்படை வசதி இல்லாமல் இருப்பது, சாதிய பாகுபாடு, விளையாட்டு மைதானத்திலும் பாரபட்சம் காட்டுவது உள்ளிட்ட பல்வேறு புகார்களை முன் வைத்தார்.
மேடையில் வைத்து அளிக்கப்பட்ட இந்த பகீர் புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பட்டமளிப்பு விழா முடிவடைந்த பிறகு அமைச்சர் செழியன் மாணவர்கள் விடுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவை ஆய்வு செய்ததோடு, கழிப்பறை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்தார். அங்குக் கடுமையான துர்நாற்றம் வீசியது. இதனால் செழியன் பல்கலைக்கழக நிர்வாகிகளை, “உள்ளே வந்தால் நாற்றம் வருகிறதா? ஆளுநரிடம் புகார் செல்லும் வரை உட்கார்ந்து கொண்டிருந்தீர்களா? பெரிய விழா நடக்கும்போது புகார் வந்தால், ஆய்வு செய்வார்கள் என்ற அடிப்படை சிந்தனை கூட இல்லையா?” எனக் கடிந்து கொண்டார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.