திருச்சியிலிருந்து சார்ஜாவுக்குக் கிளம்பிய ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தரையிறங்க முடியாமல் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வானிலேயே வட்டமடித்த நிலையில், பத்திரமாகத் தரையிறங்கியது.
முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்கியதற்கு விமானி மற்றும் விமானக் குழுவினருக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்
அவர் வெளியிட்டுள்ள செய்தியில் ’பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான உதவிகளை வழங்க ஆட்சியருக்கு உத்தரவிட்டேன். தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட விமானத்தைப் பத்திரமாகத் தரையிறக்கியதைக் கேட்டு நிம்மதி அடைந்தேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விமானம் தரையிறங்கும் காட்சி நேரலை….
திருச்சி விமான நிலையத்திலிருந்து சார்ஜாவிற்கு இன்று மாலை 5:40 மணிக்கு 144 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டது. அந்த விமானம் சென்று கொண்டிருந்த போது திடீரென அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. விமானத்தின் டயர்கள் விமானம் வானில் பறக்க தொடங்கிய பிறகும் உள்ளிழுத்துக் கொள்ளாமல் சிக்கலைக் கொடுத்திருக்கிறது. அதனைக் கண்டறிந்த விமானிகள் மீண்டும் அந்த விமானத்தைத் திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி கேட்டனர்.
உடனடியாக அதற்கான அனுமதி கிடைத்த நிலையில் மீண்டும் அந்த விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தது. ஆனால் அந்த விமான நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதன் காரணமாக விமானத்தைத் தரை இறக்குவதில் சிரமம் ஏற்பட்டது. அதற்கான முயற்சியில் விமானிகள் ஈடுபட்டனர். பாதுகாப்பிற்காக 18 ஆம்புலன்ஸ்கள் விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்தது.
5:40 மணிக்குத் திருச்சியிலிருந்து புறப்பட்ட இந்த விமானம் 8:30 மணிக்கு சார்ஜாவுக்குச் சென்று சேர்ந்திருக்க வேண்டும். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மட்டுமே இரண்டரை மணி நேரத்துக்கு மேலாக வானத்திலேயே வட்டமடித்துக் கொண்டிருந்தது.
விமானத்தின் எரிபொருளை எவ்வளவு குறைக்க முடியுமோ குறைத்து அதன்பிறகுதான் விமானத்தைத் தரையிறக்குவார்கள் எனக் கூறப்பட்டது. அதன்படி 8:15 மணிக்கு விமானம் தரையிறக்கப்படும் என விமானநிலையம் தரப்பில் சொல்லப்பட்டிருப்பதாகத் தகவலும் வெளியாகியிருந்தது. காவல்துறையினர், தீயணைப்புப்படையினர், மருத்துவர்கள் என அத்தனை தரப்பினரும் தயாராக இருந்த நிலையில், சரியாக 8:15 மணிக்கு விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs