62 வருடமாக பிஸ்னஸில் கலக்கி வரும் ‘தி சென்னை சில்க்ஸ்’, ‘குமரன் தங்க மாளிகை’ நிறுவனங்களின் நிறுவனர் டி.கே. சந்திரன் நம்மிடையே தன் பிஸ்னஸ் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
1962 வது வருடம் 100 சதுர அடியில் தொடங்கப்பட்டு இப்போ 5,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு தரக்கூடிய நிறுவனமாக சென்னை சில்க்ஸ் நிறுவனம் வளர்ந்திருக்கு அதைப் பத்தி சொல்லுங்க?
“ஆடி பதினெட்டாம் தேதி 1962ல முதன்முதலாக மதுரையில் கதர் கடையை எங்கப்பா தொடங்கியிருந்தாங்க. அப்போ ஒரு நாளைக்கு 100 ரூபாய் கூட வருமானத்தை நாங்க பார்த்தது இல்லை. 1973ல மறுபடியும் மதுரை மீனாட்சி அம்மன் கடைக்கு எதிரே மூணாவது கதர் கடையை நாங்க ஆரம்பிச்சிருந்தோம். அதுக்கு அப்பறம் தான் இந்த தொழில்ல வருமானம்கிறது அதிகமாக ஆரம்பிச்சது. நாங்க எட்டு சகோதரர்களும் ஒற்றுமையாக இணைந்து இந்த தொழிலில் முழு மூச்சாக இறங்கி நேர்மையான நியாயமான முறையில் தொழிலைச் செஞ்சது தான் இந்த வளர்ச்சிக்கான காரணம்”.
உங்கப்பா குழந்தை வேலு சார் கிட்ட இருந்து நீங்க கத்துக்கிட்ட பிஸ்னஸ் விஷயங்களைப் பத்தி சொல்லுங்க?
“எங்கப்பா பெருசா படிச்சவரு இல்லை. ஆனா தொழில்ல நேர்மையா இருக்கணும்னு சொல்லுவார். எதுவும் யாருக்கும் இடைஞ்சல் இல்லாம இருக்கணும்பான்னு சொல்லுவார். அதை தான் நாங்க இப்போ வரைக்கும் கடைபிடிச்சிட்டு வர்றோம்”
இவ்வாறு நம்மிடையே பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்ட எம். டி. சந்திரன் அவற்றை முழுமையாக காண லிங்கை கிளிக் செய்யவும்.