ஹரியானாவில் தோல்விக்குப் பிறகு நீண்ட நேரம் மௌனம் காத்து வந்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் முடிவுகளை ஆராய்ந்து, வாக்கு எண்ணிக்கை முறையின் மேல் எழுந்துள்ள புகார்கள் குறித்து தேர்தல் ஆணையத்துக்குத் தெரியப்படுத்தப்போவதாகக் கூறியிருக்கிறார்.
ஹரியானாவில் அதிர்ச்சிகரமான தோல்வியைச் சந்தித்தது காங்கிரஸ். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி ஹரியானாவில் உறுதியாக காங்கிரஸ் வென்றுவிடும் என்றே நம்பப்பட்டது.
ஆனால், தொடர்ச்சியாக மூன்றாவது முறை ஆட்சியைக் கைப்பற்றி ஹரியானாவில் வரலாறு படைத்துள்ளது பாஜக.
மறுபக்கம் ஜம்மு காஷ்மீர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறது காங்கிரஸ் – தேசிய மாநாடு கூட்டணி.
ஜம்மு காஷ்மீரைக் குறிப்பிட்டு, “ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு நன்றி. இந்தியா கூட்டணிக்கு இம்மாநிலத்தில் கிடைத்துள்ள வெற்றி அரசியலமைப்பின் வெற்றி. ஜனநாயக சுயமரியாதையின் வெற்றி” எனக் கூறியுள்ளார் ராகுல் காந்தி.
ஹரியானா மக்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி, தேர்தலுக்காக உழைத்த தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார். அத்துடன், “நமது உரிமைகளுக்காகவும், சமூக மற்றும் பொருளாதார நீதிக்காகவும், உண்மைக்காகவும் இந்தப் போராட்டத்தைத் தொடர்வோம், தொடர்ந்து உங்கள் குரலை உயர்த்துவோம்” எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷும் வாக்கு எண்ணிக்கையில் பல குற்றச்சாட்டுகள் வந்துள்ளதாகவும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே தேர்தல் ஆணையம் காங்கிரஸின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…