சிதம்பரம் கோயில் வளாகத்தில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதில் எந்த தவறும் இல்லை என பாஜக ஒருங்கிணைப்பாளர் ஹெச். ராஜா கருத்து தெரிவித்திருக்கிறார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடி இருக்கின்றனர். இதனை செல்போனில் படம்பிடித்ததால் தாக்கப்பட்டதாக விசிக நிர்வாகி போலீஸில் புகார் அளித்துள்ள நிலையில், தீட்சிதர்கள் 5 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர். இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில், `கோயிலில் கிரிக்கெட் விளையாடினால் என்ன தப்பு.
கர்ப்பகிரகத்திலா(கருவறை) விளையாடினார்கள்?’ என்று தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ஏன் கோயிலுக்குள் கிரிக்கெட் விளையாடினா என்ன தப்பு. கர்ப்பக்கிரகத்தில் (கருவறை) விளையாடினார்களா? நான் உடற்கல்வி பேராசிரியரின் மகன்.
எனது அப்பா லெஸிம், லாட்டி, மால்கம் போன்றவற்றை பற்றி ஆராய்ச்சி செய்திருக்கிறார். இதெல்லாம் கற்றுக்கொண்டது அவருடைய தவறு என்று கூறுவீர்களா?. உடற்பயிற்சி, விளையாட்டு என்பது எல்லோரும் செய்ய வேண்டும். இதில் எந்தவொரு தவறும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…