Election Results: 5வது மாநிலத்தில் கால் பதித்த ஆம் ஆத்மி… ஆனாலும் திருப்தியடையாத கெஜ்ரிவால் – ஏன்?

ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் வந்திருக்கின்றன. ஜம்முவில் டோடா தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் மெஹ்ராஜ் மாலிக் வென்றிருப்பதன் மூதல் அந்த மாநிலத்தில் முதன்முறையாக கால் பதித்துள்ளது ஆம் ஆத்மி. ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் களமிறங்கும் 5-வது சட்டசபை ஜம்மு காஷ்மீர்.

மாவட்ட வளர்ச்சி கவுன்சில் (DDC) உறுப்பினராக இருக்கும் மெஹ்ராஜ் 23,228 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் கஜய் சிங் ரானவை விட 4538 வாக்குகள் அதிகம்.

டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் அதிகாரத்தில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி கோவா, குஜராத் மாநிலங்களைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் கால்பதிக்கிறது.

ஜம்மு காஷ்மீரில் வெற்றி பெற்ற வேட்பாளர் மெஹ்ராஜை வீடியோ காலில் வாழ்த்தினார் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்.

அரவிந்த் கெஜ்ரிவால்

ஜம்முவில் நல்ல செய்தி கிடைத்தாலும், தீவிர பிரசாரங்களுக்குப் பிறகும் ஹரியானாவில் வெற்றி பெறாதது ஆம் ஆத்மிக்கு ஏமாற்றம்தான்.

டெல்லிக்கு அருகில் உள்ள மாநிலம் என்பதால் ஹரியானா தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது. ஹரியானாவில் 1.7% வாக்குகளைப் பெற்றுள்ளது ஆம் ஆத்மி. வரும் பிப்ரவரியில் டெல்லி மாநில தேர்தல் வரவிருப்பதால் ஹரியானாவில் குறைந்தபட்ச வெற்றியை எதிர்பார்த்தது ஆம் ஆத்மி கட்சி. தனித்து நின்ற ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட 89 வேட்பாளர்களும் தோல்வியடைந்தனர்.

கெஜ்ரிவாலின் சொந்த மாநிலமாக இருந்தாலும் 2014 முதலே ஹரியானாவில் ஒரு தேர்தலில் ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியாதது ஆம் ஆத்மிக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…