கோவை, கரூர் மட்டுமல்ல… செந்தில் பாலாஜி கன்ட்ரோலில் வரும் கொங்கு மண்டலத்தின் மற்றொரு மாவட்டம்?!

ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி, மீண்டும் அதே துறைக்கு அமைச்சராகிவிட்டார். சிறை  செல்வதற்கு முன்பு கரூர், கோவை என்று இரண்டு மாவட்ட அரசியலை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். மீண்டும் அமைச்சராகி ஒரு வாரத்துக்கு பிறகு, செந்தில் பாலாஜி கரூர் மாவட்டத்துக்குச் சென்றுள்ளார்.

கோவை

இருப்பினும் அவர் கோவை மாவட்டத்துக்கு வரவில்லை. இப்போது வரை முத்துசாமியே கோவை மாவட்டத்தின் அதிகாரபூர்வ அமைச்சராக உள்ளார்.

மிக விரைவிலேயே செந்தில் பாலாஜியை கோவை பொறுப்பு அமைச்சராக நியமித்து அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு தான் செந்தில் பாலாஜி கோவை வருவார் என தகவல் வெளியாகவுள்ளது. சிறை செல்வதற்கு முன்பும், சிறையில் இருந்து வெளி வந்தப் பிறகும் செந்தில் பாலாஜி கொங்கு மண்டல தளபதி என்ற அந்தஸ்தை நோக்கி காய் நகர்த்தி வருகிறார்.

செந்தில் பாலாஜி

திமுக தலைமையும் செந்தில் பாலாஜியை கொங்கு மண்டலத்தின் முக்கிய தளபதியாக தான் பார்க்கிறது.

கோவை, கரூர் மட்டுமல்லாமல், கொங்கு மண்டலத்தின் பல்வேறு பகுதிகளில் செந்தில் பாலாஜிக்கு தனக்கான ஆதரவாளர்களை உருவாக்கியுள்ளார். இந்தமுறை, கோவை, கரூர் மட்டுமல்லாமல் கொங்கு மண்டலத்தின் மற்ற மாவட்டங்களிலும் செந்தில் பாலாஜியின் ஆதிக்கம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

ராமச்சந்திரன்

சமீபத்தில் வெளியான அமைச்சரவை மாற்றத்தில் ராமச்சந்திரன் நீக்கப்பட்டிருந்தார். நீலகிரியைச் சேர்ந்த ராமச்சந்திரன், தற்போது அரசு கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் நீலகிரிக்கு அமைச்சர் இல்லாத நிலை நிலவுகிறது.

பொதுவாக அமைச்சர் இல்லாத மாவட்டத்தில், பொறுப்பு அமைச்சர் நியமிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நீலகிரி மாவட்டத்துக்கு செந்தில் பாலாஜி பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நீலகிரி

இருப்பினும் ஏற்கெனவே திமுக சீனியரான ஆ.ராசா நீலகிரி எம்பியாக உள்ளார். அதனால் செந்தில் பாலாஜி நியமனத்தால் அவர்களுக்கு இடையே உரசல் ஏற்பட்டு கட்சிக்கு பின்னடைவு ஆகிவிடக்கூடாது என்றும் தலைமையில் யோசிக்கிறதாம்.

அதேநேரத்தில் நீலகிரி திமுகவில் கடுமையான உள்கட்சி பிரச்னை நிலவி வருகிறது. இந்தப் பிரச்னையை சமாளிக்க செந்தில் பாலாஜி சரியான தேர்வாக இருப்பார் என்றும் சிலர் தலைமைக்கு பரிந்துரை செய்துள்ளனராம்.

செந்தில் பாலாஜி

 இதுகுறித்து தலைமை ஆலோசனை செய்து வருகிறது. விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று திமுக வட்டாரத்தில் பேசுகிறார்கள்..!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb