`தீவிர வலதுசாரிகளின் சிம்ம சொப்பனம் A.G.Noorani’ – Frontline Journalist R Vijaya Sankar Speech

ஏ.ஜி.நூரானி 20 ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு கிடைத்த ஆகச்சிறந்த அறிவார்ந்த ஆளுமைகளுள் ஒருவர். வழக்கறிஞரான இவர் கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்கும் மேல் இந்திய தேசம் கண்ட அரசியல் சமூக நீதித்துறைச் சார்ந்த பிரச்சனைகள் குறித்து தனது புலமையின் வழி கட்டுரைகளையும் புத்தகங்களையும் படைத்து வரலாற்று ஆவணங்களாக விட்டுச் சென்றிருக்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தனது 93 வயதில் உடல்நலக்குறைவினால் இயற்கை எய்திருந்தார். இறக்கும் வரைக்குமே தொடர்ச்சியாக சமூகம் சார்ந்தும் அரசியல் சார்ந்தும் எழுதிக்கொண்டேதான் இருந்தார். இந்துத்துவ அடிப்படைவாத சக்திகளுக்கு எதிராக தனது எழுத்தின் வழி தீவிரமாக செயல்பட்டார். ஏ.ஜி.நூரானியின் நினைவுகளைப் பகிரும் வகையில், ‘அரசியல் சாசனத்தை பாதுகாக்க முன்னின்றவர் ஏ.ஜி.நூரானி’ என்ற தலைப்பில் அவருடன் நெருங்கி பழகியிருந்த Front line இதழின் முன்னாள் ஆசிரியர் விஜயசங்கர் Vijayasankar Ramachandran அவர்கள் சில நாட்களுக்கு முன்பு ஒரு கருத்தரங்கில் பேசியிருந்தார். ஏ.ஜி.நூரானியின் பணிகளை உள்ளும் புறமுமாக விரிவாக விளக்கும் வகையிலான சுவாரஸ்யமான அந்த உரை இங்கே.

முழுமையாக காண லிங்கை கிளிக் செய்யவும்.