இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு கொண்டாட்ட விமான சாகச நிகழ்ச்சி இன்று காலை சுமார் 11 மணியளவில் தொடங்கி 1 மணி வரை சென்னை மெரினாவில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது.
இந்த விமான சாகச நிகழ்ச்சியில் விமானப்படை தலைமை தளபதி ஏ.பி சிங், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
‘உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்ற ராணுவ நிகழ்ச்சி’ என்பதற்காக இந்த நிகழ்ச்சி தற்போது லிம்கா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம்பிடிக்க உள்ளது. இன்று மெரினாவில் நடந்த சாகச நிகழ்ச்சியை சுமார் 4 லட்சம் பேர் மெரினா கடற்கரையிலும், 5 லட்சம் பேர் மெரினா சாலை, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் பார்த்திருக்கிறார்கள். ஆக மொத்தம் 10 லட்சத்திற்கு மேலானோர் இந்த நிகழ்ச்சியை நேரில் கண்டுகளித்துள்ளனர்.