கடந்த 2014-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல்களில், எந்த கட்சியும் முழுப் பெரும்பான்மையைப் பெறவில்லை. மெகபூபா முப்தி தலைமையிலான ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி) 28 இடங்களைப் பெற்ற நிலையில், 25 இடங்களைப் பெற்று மாநிலத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக பா.ஜ.க இருந்தது. அதனால் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தன. ஆனால், 2018-ம் ஆண்டு பாஜக கூட்டணியை வாபஸ் பெற்றதால் மெகபூபா முப்தி தலைமையிலான அரசு கவிழ்ந்தது.
அதன் பிறகே ஜம்மு – காஷ்மீர் ஆளுநர் ஆட்சியின் கீழ் வந்தது. அதைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து சட்டம் 370-வது பிரிவு மத்திய பா.ஜ.க அரசால் ரத்து செய்யப்பட்டது, ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது, தீவிரவாதத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை என பா.ஜ.க அரசு முன்னெடுக்கும் பல்வேறு நடவடிக்கைகள் மீதான விமர்சனம், ஆளுநரின் அதிகாரம் மீதான குற்றச்சாட்டுகள் எனத் தொடர்ந்த சலசலப்பால் தேர்தல் நடைபெறாமல் இருந்தது.
இந்த நிலையில்தான் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டதற்குப் பிறகான, முதல் சட்டமன்றத் தேர்தல், செப்டம்பர் 18-ம் தேதி 24 தொகுதிகளுக்கும், 25-ம் தேதி 26 தொகுதிகளுக்கும், இறுதிகட்ட தேர்தல் கடந்த 1-ம் தேதி 40 தொகுதிகளுக்கும் நடைபெற்றது. அதில், நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான (55.40 சதவிகிதம்) வாக்குகளை விட, சட்டமன்றத் தேர்தலில் (63.45 சதவிகித) அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன. அதனால் இந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் கூர்மையாக கவனிக்கப்படுகிறது. ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நிறைவுற்ற நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியிருக்கிறது. அதில்,
People’s Pulse
காங்கிரஸ் – 13 -15
பாஜக – 23 – 27
ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி – 33 – 35
மக்கள் ஜனநாயக கட்சி – 7 – 11
மற்றவை – 4- 5
Aaj Tak CVoter
காங்கிரஸ் – 11 – 15
பாஜக – 27 – 31
மக்கள் ஜனநாயக கட்சி – 0 – 2
மற்றவை – 0 – 1
Dainik Bhaskar
ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி + காங்கிரஸ் – 35 – 40
பாஜக – 20 – 25
மக்கள் ஜனநாயக கட்சி – 4 -7
மற்றவை – 12 – 16
Gulistan News – Republic
காங்கிரஸ் – 3 – 6
பாஜக – 28 – 30
ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி – 28 – 30
மக்கள் ஜனநாயக கட்சி – 5 – 7
மற்றவை – 8 – 16
CVoter – India Today
காங்கிரஸ் + ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி – 40 – 48
பாஜக – 27 – 32
மக்கள் ஜனநாயக கட்சி – 6 – 14
மற்றவை – 6 – 11
Matrize
காங்கிரஸ் + ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி – 28 – 30
பாஜக – 28 – 30
மக்கள் ஜனநாயக கட்சி – 5 – 7
மற்றவை – 8 – 16
NDTV
காங்கிரஸ் + ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி – 43
பாஜக – 26
மக்கள் ஜனநாயக கட்சி – 8
மற்றவை – 13
Times Now
காங்கிரஸ் + ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி – 31 – 36
பாஜக – 28 – 30
மக்கள் ஜனநாயக கட்சி – 5 -7
மற்றவை – 8 – 16
News 24
காங்கிரஸ் + ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி – 46 – 50
பாஜக – 23 – 27
மக்கள் ஜனநாயக கட்சி – 7 – 11
மற்றவை – 4 – 6
Axis My India
காங்கிரஸ் + ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி – 35 – 45
பாஜக – 24 – 34
மக்கள் ஜனநாயக கட்சி – 4 – 6
மற்றவை – 8 – 27
India Today – CVoter
காங்கிரஸ் + ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி – 40 – 48
பாஜக – 27 – 32
மக்கள் ஜனநாயக கட்சி – 6 – 12
மற்றவை – 6 – 11