Haryana : ஆட்சியமைக்கிறதா காங்கிரஸ்? – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு சொல்வதென்ன?

மத்தியில் மூன்றாவது முறை ஆட்சியைக் கைப்பற்றியது போல, ஹரியானா மாநிலத்தில் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியில் இருந்த பா.ஜ.க மூன்றாவது முறை ஆட்சியைக் கைப்பற்ற கடுமையாக போராடியது. அதேநேரம் கடந்த இரண்டு முறை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக தொடர்ந்த காங்கிரஸ், இந்த முறை பலமான இந்தியா கூட்டணியுடன் அழுத்தமாக அமர்ந்திருக்கிறது. அதனால், ஹரியானா தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கூட்டணிக்கும் மிக முக்கியமாக கருதப்படுகிறது. ஹரியானவை பொறுத்தவரை, பிற்படுத்தப்பட்டோர், விவசாயிகளின் வாக்கு சதவிகிதம் அதிகம்.

ராகுல் காந்தி – மோடி

இதை அறுவடை செய்யும் நோக்கில் பல திட்டங்களை மத்திய பா.ஜ.க அரசு அறிவித்தது. ஆனால், தேர்தல் தொடங்குவதற்கு முன்பே, விவசாயிகள் போராட்டம், அக்னிபாத் திட்ட எதிர்ப்பு, விவசாயிகள் போராட்டம் குறித்து பா.ஜ.க எம்.பி கங்கனா ரானாவத்தின் சர்ச்சை கருத்துக்கள், மல்யுத்த வீரர்களின் பரவலான போராட்டம் எனப் பல்வேறு சிக்கல்களை எதிர்க்கொண்டது. அதனால், இந்த தேர்தலில் பல கட்சிகளும், கூட்டணிகளும் தங்கள் இருப்பை தக்கவைத்துக் கொள்ள கடுமையான போராடின.

அதற்கு தொடக்கப்புள்ளியாக, தேர்தலுக்கு முன்பே, பா.ஜ.க கூட்டணியிலிருந்து வெளியேறியது ஜனநாயக் ஜனதா கட்சி (ஜேஜேபி). எனவே, இந்தத் தேர்தலில் போட்டியிட்ட, இந்திய தேசிய லோக் தள், பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி, சந்திரசேகர் ஆசாத் ராவ் தலைமையிலான ஆசாத் சமாஜ் கட்சி, பா.ஜ.க, காங்கிரஸ் ஆகியவற்றின் வழக்கமான தேர்தல் கணக்கீடுகள் இந்த முறை பொய்த்துப்போக வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.

ஹரியானா சட்டமன்ற தேர்தல்

இதைவிட முக்கியமாக, இந்த தேர்தல் முடிவு, இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கவிருக்கும், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களின் மனநிலைக்கு ஒரு முன்னோடியாகவே இருக்கும் என அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, இந்த தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் – பா.ஜ.க இரண்டு கட்சிகளும் முக்கியமானதாக, தங்கள் பலத்தை பரீட்சிப்பதாகவே இருக்கிறது. 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில், ஹரியானா தேர்தலின் தேர்தல் முன்முடி கருத்துக்கணிப்பு (ExitPoll) வெளியாகியிருக்கிறது. அதில்…

People’s Pulse

காங்கிரஸ் – 55

பாஜக – 26

ஜனநாயக் ஜனதா கட்சி – 0-1

இந்திய தேசிய லோக் தளம் – 2-3

மற்றவை – 3-5

Dainik Bhaskar

காங்கிரஸ் – 44 -44

பாஜக – 19 – 29

ஜனநாயக் ஜனதா கட்சி – 0 -1

இந்திய தேசிய லோக் தளம் – 1 -5

மற்றவை – 4 – 9

ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி

Dhruv Research

காங்கிரஸ் – 56 -64

பாஜக – 27 – 32

மற்றவை – 5 – 6

Republic Bharat – Matrize

காங்கிரஸ் – 55 – 62

பாஜக – 18 – 24

ஜனநாயக் ஜனதா கட்சி – 0 – 3

இந்திய தேசிய லோக் தளம் – 3 – 6

மற்றவை – 2 – 5

ஹரியானா சட்டமன்ற தேர்தல்: காங்கிரஸ் – பா.ஜ.க

Republic Tv – P-Marq

காங்கிரஸ் – 51 – 61

பாஜக – 27 – 35

ஜனநாயக் ஜனதா கட்சி – 0

இந்திய தேசிய லோக் தளம் – 3 – 6

மற்றவை – 0

NDTV

காங்கிரஸ் – 55

பாஜக – 25

ஜனநாயக் ஜனதா கட்சி – 1

இந்திய தேசிய லோக் தளம் 3

மற்றவை – 6

Jist-TIF Research

காங்கிரஸ் – 45 – 53

பாஜக – 29 – 37

ஜனநாயக் ஜனதா கட்சி – 0

இந்திய தேசிய லோக் தளம் 0 – 2

மற்றவை – 4 – 6

மோடி – ராகுல் காந்தி

Times Now

காங்கிரஸ் – 50 – 64

பாஜக + NDA – 22 – 32

மற்றவை – 2 – 4

News 24

காங்கிரஸ் – 55 – 62

பாஜக + NDA – 18 – 24

மற்றவை – 2 – 5

Aaj Tak CVoter

காங்கிரஸ் – 20 – 28

பாஜக – 50 – 58

ஜனநாயக் ஜனதா கட்சி – 0 – 2

இந்திய தேசிய லோக் தளம் 0 – 2

மற்றவை – 10 – 14