தமிழக பள்ளி கல்வித்துறையில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரி, அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என 15,000 பேருக்கு செப்டம்பர் மாத சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்களின் சம்பளம் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு காரணம் மத்திய அரசு எனக்கூறப்படுகிறது.
சமக்ரா சிக்ஷா திட்டத்தின் (ஒருங்கிணைந்த கல்வித் திட்டம்) கீழ் தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கும் மத்திய அரசு சார்பில் நிதி விடுவிக்கப்பட வேண்டும். ஆனால் தமிழக பள்ளி கல்வித்துறைக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.573 கோடி நிதி இன்னும் கொடுக்காமல் இருப்பதால், நிதி பற்றாக்குறை காரணமாக 15,000 பேரும் சம்பளத்துக்காக காத்திருக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது என்கிறார்கள்.
இந்த நிலையில் தமிழ்நாடு சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “ஒருங்கிணைந்த கல்வி திட்டத்திற்கான மத்திய அரசின் நிதி பள்ளிக் கல்வித்துறைக்கு வரவில்லை என்ற காரணம் கூறி நிரந்தர ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள் என்று சுமார் 32,500 பேருக்கு செப்டம்பர் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படவில்லை என்று நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.
தமிழகத்தின் எதிர்கால சந்ததியினரை உருவாக்கக்கூடிய செம்மையான பணியினை மேற்கொள்பவர்கள் ஆசிரியர் சமுதாயத்தினர். அப்படிப்பட்ட மேன்மையான பணியினை மாதம் முழுவதும் செய்துவிட்டு, மாதக் கடைசியில் அதற்கு உண்டான ஊதியத்தை வாங்காமல் வெறுங்கையுடன் வீடு திரும்பும்பொழுது வீட்டு வாடகை, குடும்பச் செலவுகள், வாங்கியக் கடனை திருப்பிச் செலுத்துதல் என்று பணத்தை கட்டமுடியாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர் ஆசிரியர் பெருமக்கள்.
தனியார் நடத்திய கார் பந்தயத்திற்கு கோடிக்கணக்கான ரூபாயை செலவு செய்த மு.க.ஸ்டாலின்-ன் திமுக அரசு, மத்திய அரசு நிதி வரவில்லை என்ற காரணம் கூறி ஆசிரியர்களுக்கு சென்ற மாதத்திற்கான சம்பளம் வழங்காதது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, மாநில அரசின் நிதியிலிருந்து சுமார் 32,500 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்காமல் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்குமாறும், இனி மாதாந்திர சம்பளத்தை நிறுத்தாது வழங்க வேண்டும் என்றும் ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb