திருச்சி விமான நிலையத்தில் ₹6 லட்சம் மதிப்புள்ள சிகரெட்டுகள் பறிமுதல்.. தொடரும் கடத்தல் சம்பவங்கள்!

பாங்காக் நாட்டில் இருந்து ஏர் ஏசியா விமான மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது, ஒரு பயணியின் உடமையை சோதனை செய்த பொழுது அதில் அட்டை பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிகரெட் இருந்துள்ளது. அதனை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதில், ரூ.4.43 லட்சம் மதிப்பிலான 26,060 சிகரெட்கள் இருந்துள்ளது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கடத்தி வரப்பட்ட சிகரெட்டுகள்

அதே போல சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணி ஒருவர் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.1.55 லட்சம் மதிப்புள்ள 9,140 சிகரெட்களையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து இரண்டு பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

“திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து பல்வேறு விமானங்களில் வரும் பயணிகள் தங்கம், சிகரெட்டுகள் உள்ளிட்டப் பொருள்களை கடத்தி வருவது தொடர்கதையாகி இருக்கிறது. இதை முற்றிலும் தடுக்க, சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group, இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…