Walt Disney World: கற்பனை உலகுக்கு உயிர் கொடுத்த டிஸ்னி வேர்ல்ட்.. 10 சுவாரஸ்ய தகவல்கள்!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் ரசிக்கக்கூடிய வகையில், சிண்ட்ரெல்லா, ஸ்டார் வார்ஸ், டாய் ஸ்டோரி, பீட்டர்பேன், Frozen, கார்ஸ், Pirates of the Caribbean and Haunted Mansion போன்ற ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் செதுக்கியிருப்பார்கள். 1901-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி, சிகாகோவில் பிறந்த வால்ட் டிஸ்னி என்பவரின் சிறு ஓவியம் இன்று பொழுது போக்கு உலகை தன் கைவசம் வைத்திருக்கிறது.

வால்ட் டிஸ்னி

திரையில் மட்டுமே காட்ட முடிந்த கற்பனை உலகை, நிஜமாக்கி காட்ட விரும்பிய வால்ட் டிஸ்னி, 1955-ம் ஆண்டில் 17 மில்லியன் டாலர் செலவில் மிகப்பிரமாண்டமான டிஸ்னிலேண்ட் (Disneyland Park) என்ற பொழுதுபோக்குப் பூங்காவை அமெரிக்காவின் ஆக்லாந்து நகரில் உருவாக்கினார். இந்த பூங்கா நிச்சயம் முதல் ஆண்டிலேயே தோல்வியின் முகத்தை காட்டும் என்று பலரும் கருதினர். ஆனால் பூங்காவை பார்க்க வந்தவர்களோ மிக்கி மவுஸின் அழகை ரசித்து பூலோக சொர்க்கம் என்று வர்ணித்தனர். அதன்பிறகுதான், வால்ட் டிஸ்னி வேர்ல்ட் (Disney World) அமெரிக்காவின் புளோரிடாவில் அக்டோபர் 1, 1971-ல் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது.

உலகின் மிகவும் மகிழ்ச்சியான இடம்…

புளோரிடாவில் இருக்கும் வால்ட் டிஸ்னி வேர்ல்டுக்கு மட்டும் தற்போதும் ஆண்டுக்கு சுமார் 15 மில்லியன் பார்வையாளர்கள் சென்றுவருகின்றனர். ஒவ்வொரு குழந்தையும் சென்று பார்த்து வர விரும்பும் கனவுலகமாகவும் மாறி வளர்ந்து நிற்கிறது. கார்ட்டூன், அனிமேஷன் உலகில் பல புதிய பரிமாணங்களைப் படைத்து, இன்று `உலகின் மிகவும் மகிழ்ச்சியான இடம்’ எனக் கருதப்படும் உலகின் நம்பர் 1 பொழுதுபோக்குப் பூங்காவாக இருக்கும் வால்ட் டிஸ்னி உலகின் சுவாரஸ்யமான செய்திகளை, இந்த தொகுப்பில் காணலாம்.

1. கிட்டத்தட்ட 27,520 ஏக்கர் பரப்பளவு இடத்தில், பார்வையாளர்களை நீண்ட நேரம் உள்ளேயே இருக்கச் செய்ய நான்கு தீம் பார்க் என்ற அமைப்பில் வால்ட் டிஸ்னி எனும் கற்பனை உலகம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

மிக்கியின் உருவம்

2. டிஸ்னியின் ஹாலிவுட் ஸ்டுடியோஸ் 1989-ல் திறக்கப்பட்டபோது, ஸ்டுடியோ முழுவதும் Hidden Mickeys எனும் வடிவமைப்பு மிகுந்த சுவாரஸ்யத்தைக் கூட்டும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. ஓய்வு விடுதிகள், உணவகங்கள் உள்ளிட்ட எந்த திசையில் திரும்பினாலும் மிக்கியின் உருவம் அதில் அதில் ஏதேனும் ஒரு வடிவத்தில் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டது. அப்போது, “டிஸ்னியின் ஹாலிவுட் ஸ்டுடியோஸில் ஒரு மிக்கியை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது” என்ற விளம்பரம் அப்போது வைரலானது.

பிறகுதான் தெரிந்தது, டிஸ்னியின் ஹாலிவுட் ஸ்டுடியோவே, ஒரு பெரிய மறைக்கப்பட்ட மிக்கியாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்த வடிவமைப்பை வானிலிருந்து பார்த்ததால் மட்டுமே பார்க்க முடியும் என அது தொடர்பான புகைப்படங்களும் வெளியானது. 1994-ம் ஆண்டு ஹாலிவுட் ஸ்டுடியோ புதுப்பித்தபோது, அந்த வடிவமைப்பு மாற்றப்பட்டது. ஆனால் அப்போதைய அந்த விளம்பரம் பெரியளவில் பேசப்பட்டது.

3. 1971-ல் வால்ட் டிஸ்னி வேர்ல்ட் தொடங்கப்பட்ட போது, டிஸ்னி வேர்ல்ட் தனக்கென தனி விமான நிலையத்தையே வைத்திருந்தது. அமெரிக்காவின் ஆர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து டிஸ்னி வேர்ல்டுக்கு விமான சேவை இருந்தது. சுமார் 4 விமானங்கள் வந்து, நின்று செல்லும் வகையில் அந்த விமான நிலையம் வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்த விமான நிலையத்துக்கு ‘லேக் பியூனா விஸ்டா விமான நிலையம்’ எனப் பெயரும் வைக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து தீம் பார்க்கின் விரிவாக்கத்தால், விமான ஓடுபாதையை சுருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால், 1980-களின் முற்பகுதியில் அந்த விமான நிலையம் செய்யலாற்றதாக மாறி, அதன்பிறகு விமான சேவை நிறுத்தப்பட்டது.

மிகவும் புதுமையானது..

5. டிஸ்னி என்றாலே உடனே நினைவுக்கு வருவது சிண்ட்ரெல்லா கோட்டை. பார்ப்பதற்கு உண்மையான கோட்டைப் போல இருக்கும் இது, கட்டுவதற்கு எந்த கற்களும் பயன்படுத்தப்படவில்லை. முழுக்க முழுக்க இரும்பு, சிமெண்ட், கண்ணாடியிழை ஆகியவையால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

6. 1970 -களில் கம்ப்யூட்டர் பயன்பாடு பெரிதாக இல்லாத காலத்தில், வால்ட் டிஸ்னி வேர்ல்டின் ‘மேஜிக் கிங்டம் தீம்’ பூங்காவில் அமைந்துள்ள ‘ஸ்பேஸ் மவுண்டன்’ (Space Mountain) முதல் முழுமையாக கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டில் இயக்கப்பட்டது. கம்ப்யூட்டர் மூலம் ஒவ்வொரு டிஸ்னி ஸ்பேஸ் வாகனத்தின் எடை, வாகனங்களுக்கு இடையே உள்ள தூரம், ஆட்டோமேஷன் போன்ற துல்லியமான விவரங்களை கையாள பயன்படுத்தப்பட்டது. இந்த தொழில்நுட்பம் 1975-ல் மிகவும் புதுமையானதாக கவனிக்கப்பட்டது.

Disney World

7. கலிபோர்னியாவில் உள்ள டிஸ்னிலேண்டின் ஸ்பேஸ் மவுண்டன், 1970-களில் கட்டப்பட்டது. 18 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில், நாசா விண்வெளி வீரருடன் கலந்தாலோசித்து வடிவமைக்கப்பட்டது.

8. அமெரிக்காவில் உள்ள வேறு எந்தப் பகுதியையும் விட Disney World இருக்கும் புளோரிடா அதிக மின்னல் தாக்குதல்களால் பாதிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு சதுர மைலுக்கு 50-க்கும் அதிகமான மின்னல் தாக்குதல் பாதிப்பு ஏற்படுகிறது. அதனால், Disney World முழுவதும் பார்வையாளர்களின் பார்வைக்கு சிக்காத வகையில், மின்னல் கம்பிகள் அமைக்கப்பட்டிருகிறது. பார்வையாளர்களை பாதுகாக்க, மின்னல் தாக்குதல்களை திசைதிருப்ப, Disney World ஒரு தனித்துவமான வடிவமைப்பு அம்சத்தை கையாள்கிறது.

Disney World

ஆண்டும் 115 மில்லியன் பார்வையாளர்கள்..

9. அமெரிக்க வரலாற்றில் The Carousel of Progress என்ற டிஸ்னியின் மேடை நாடகம், இன்றுவரை தொடர்ந்து நடந்து வருகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நாடகம் ‘அமெரிக்க நாடக வரலாற்றில் மிக நீண்ட கால மேடை நிகழ்ச்சி”- க்கான சாதனை விருதைப் பெற்றிருக்கிறது.

10. 3.2 ஹெக்டேர் நிலப்பரப்பில் “மிக்கி மவுஸ் பார்க்” என்ற பெயரில் தொடங்க திட்டமிடப்பட்ட இந்த டிஸ்னி வேர்ல்டு, டோக்கியோ, பாரிஸ், ஹாங்காங், ஷாங்காய் என ஒவ்வொரு ஆண்டும் 115 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை வரவேற்றுக் கொண்டிருக்கிறது.