கோவை, அன்னூர் கோவில்பாளையம் பகுதி அருகே ஒரு தனியார் பள்ளி உள்ளது. அங்கு செளந்தர்யா என்பவர் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அதே பள்ளியில் 13 வயது சிறுமி 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
அந்த மாணவியின் வகுப்புக்கும், சௌந்தர்யா தான் சமூக அறிவியல் பாடம் எடுத்து வந்தார். அந்த மாணவியிடம் சௌந்தர்யா நெருங்கி பழகி வந்துள்ளார். இதனிடையே சௌந்தர்யா, அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது.
இது குறித்து அந்த மாணவி, பெற்றோரிடம் சொல்லியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதனடிப்படையில் போலீஸார் விசாரணையில் இறங்கினர்.
அதில் சௌந்தர்யா மீது மாணவி முன்வைத்த புகார் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, போலீஸார் சௌந்தர்யா மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து கைதுசெய்தனர்.
இது அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் விசாரணையில், சௌந்தர்யா இதேபோல பல மாணவிகளிடம் நெருங்கி பழகி பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. 32 வயதாகும் சௌந்தர்யாவுக்கு திருமணம் ஆகவில்லை.
அவர் இதற்கு முன்பு பணியாற்றி பள்ளிகளிலும், மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்தப் புகாரில், சௌந்தர்யா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.