உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகப்போகிறார் என்ற கடந்த ஒரு மாத கால பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆளுநர் மாளிகையிலிருந்து நேற்று அறிக்கை ஒன்று வெளியானது. அந்த அறிக்கையில், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி, செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி உள்ளிட்ட அமைச்சரவை மாற்றத்துக்கான முதல்வரின் பரிந்துரைகளை ஏற்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
மறுபக்கம், கலைஞர் முதல்வராக இருந்தபோது அவரின் மகன் ஸ்டாலின் துணை முதல்வராக்கப்பட்டார், இப்போது `ஸ்டாலின் முதல்வராக இருக்கும்போது இவரின் மகன் உதயநிதி துணை முதல்வராக்கப்படுகிறார். இதுதான் வாரிசு அரசியல்’ எனத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து விமர்சனங்கள் எழுந்தன.
இவ்வாறிருக்க, தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் அமைச்சர்கள் ஆகியோருடன் உதயநிதி முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். மேலும், `துணை முதலமைச்சர் என்பது பதவியல்ல, பொறுப்பு என்பதை உணர்ந்து, தமிழ்நாட்டு மக்களின் ஏற்றத்துக்காக, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வகுத்துத் தந்த பாதையில், முதலமைச்சரின் வழிகாட்டலில், சக அமைச்சர் பெருமக்களோடு இணைந்து பணியாற்றுவோம்’ என்று நன்றி தெரிவித்து ட்வீட் செய்திருந்தார்.
அதைத்தொடர்ந்து, மெரினாவிலுள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்துக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, “முதல்வர் எனக்கு புதிய பொறுப்பைக் கொடுத்திருக்கிறார். மக்களுக்காக உழைப்பதற்காக இந்த வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார்கள். முதல்வர், கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் அனைத்து அமைச்சர்களின் வழிகாட்டுதலின்படி எனது பணிகள் அமையும்.
நிறைய பேர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள், அதற்கு நன்றி. நிறைய பேர் விமர்சனமும் செய்திருக்கிறார்கள். அதற்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்த்துகளைப் போலவே, விமர்சனங்களையும் உள்வாங்கிக் கொள்கிறேன். இளைஞரணி செயலாளரானபோதும், சட்டமன்ற உறுப்பினரானபோதும், அமைச்சரானபோதும் விமர்சனங்கள் வந்தது. எனவே, விமர்சனங்களுக்கு எனது செயல்களால் பதிலளிப்பேன்” என்று தெரிவித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs