கோவை ஐஓபி காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த கிருஷ்ணன்(68). பிசியோதெரபிஸ்டான இவரின் மனைவி குழந்தைகள் நல மருத்துவராக உள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இவர்கள் மருதமலை அடிவாரத்தில் சொகுசு பங்களா கட்டிவருகின்றனர். இதற்காக 23 வயது பெண் கட்டட கலை நிபுணரிடம் பணிகளை ஒப்படைத்துள்ளார்.
பணிகள் முடிந்த நிலையில், ஆனந்த கிருஷ்ணன் மரியாதை நிமித்தமாக அந்தப் பெண்ணை வீட்டுக்கு அழைத்துள்ளார். அப்போது அவரின் வீட்டில், ஆனந்த கிருஷ்ணனின் மனைவி, மகன் உள்ளிட்ட யாரும் இல்லை.
இந்த நிலையில் ஆனந்த கிருஷ்ணன் இளம் பெண்ணுக்கு காபியில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். அதை குடித்த உடனே அவர் மயக்கமடைந்துள்ளார். அதன்பிறகு ஆனந்த கிருஷ்ணன் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து அந்தப் பெண் கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதனடிப்படையில் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் ஆனந்த கிருஷ்ணன் தலைமறைவாகிவிட்டார்.
விசாரணையில் ஆனந்த கிருஷ்ணன், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அங்கு சென்ற கோவை போலீஸார் ஆனந்த கிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவரின் வீட்டை பல பிரபலங்கள் பார்வையிட்டுள்ளனர்.
அப்படி சமீபத்தில் பிரபல சீரியல் நடிகை ஒருவர், ஆனந்த கிருஷ்ணனின் வீட்டுக்கு சென்று ஹோம் டூர் வீடியோ வெளியிட்டிருந்தார். வனப்பகுதிக்கு மிகவும் அருகில் உள்ள அந்த வீட்டில் ஏர்கன் பயன்படுத்தியது அந்த வீடியோவில் சர்ச்சையானதும் குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY