1964-ல் துவங்கப்பட்ட ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் அதன் தனித்துவமான பாரம்பரியத்தை தூய்மை, நம்பிக்கை மற்றும் அபூர்வமான கலைத்திறன் ஆகியவற்றினால் வடிவமைத்துள்ளது. இந்த நீடித்த அர்ப்பணிப்பு ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் நிறுவனத்தை தென்னிந்தியா மட்டுமல்லாது கடல் கடந்து சிங்கப்பூரிலும், நகைத் துறையில் அதன் முன்னணி பெயரை நிலைநிறுத்தியுள்ளது. தலைமுறை தலைமுறைகளாக பல குடும்பங்கள் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் மற்றும் வைர நகைகளை வாங்க ஜிஆர்டியையே விரும்புகின்றனர். தரம் என்றாலே இந்நிறுவனத்தின் பெயர் ஒரு அசைக்க முடியாத சான்றாக உள்ளது.
இப்போது ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் அதன் பாரம்பரியத்தை விரிவுபடுத்தும் வகையில், புதிதாக மென்’ஸ் கலெக்ஷனை வெளியிடுகிறது. இது இந்நிறுவனத்தை வரையறுக்கும் ‘தரம் மற்றும் ஸ்டைல்’ என்னும் அதே உன்னிப்பான தாரக மந்திரத்தோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கலெக்க்ஷன்களில் பிரேஸிலேட், ரிங் மற்றும் செயின் உட்பட ஆண்களுக்கான அணிகலன்களும்; காலத்தால் நீடித்த நேர்த்தியையும், நாகரிகமான தன்மையையும்; ஒவ்வொரு ஆண்களின் ‘பண்பு மற்றும் வலிமை’ ஆகிய இரண்டையும் வெளிப்படுத்துவத்தை இலகுவாக்குகிறது. மேலும் ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் இந்த நவீன மென்’ஸ் கலெக்ஷன் விளம்பரத்தில், பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ‘ரவிச்சந்திரன் அஸ்வின்’ அவர்கள் ஈடுபட்டுள்ளார் என்பதை வெளிப்படுத்துவதில் இந்நிறுவனம் மகிழ்ச்சியடைகிறது.
இந்திய கிரிக்கெட் அணியில் (தற்போது) 500 விக்கெட்டுகள் வீழ்த்திய சாதனையாளருடன் இணைந்து இதற்கான புதிய விளம்பர படத்தை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவில், கிரிக்கெட் வீரர் அஸ்வினின் மனைவி, ‘அஸ்வின் தனக்காகவும், அவர்களது குடும்பத்திற்காக செய்த அனைத்திற்க்காகவும் நன்றி கூறி கொண்டாடும், ஒரு மனதைக் கவரும் தருணத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள்’. இவ்விருவரின் இந்த உணர்வுபூர்வமான தொடர்பானது, கலெக்க்ஷனின் அசத்தலான மற்றும் ஸ்டைலான வடிவமைப்புகளின் காட்சியும்; ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் மென் கலெக்க்ஷனின் வசீகரம் மற்றும் நேர்த்தியும்; இந்தக்காணொளியில் அழகாக படமாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் நிர்வாக இயக்குனர் திரு. ஜி.ஆர். ‘ஆனந்த்’ அனந்தபத்மநாபன் அவர்கள் கூறியதாவது: “எங்கள் மென்’ஸ் கலெக்ஷனில் ‘ஸ்டைலான பிரேஸிலேட்கள், நேர்த்தியான செயின்கள், போல்டான கடாக்கள் மற்றும் நேர்த்தியான மோதிரங்கள்’ என கண்கவரும் நகைகள் ஆண்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு நகைகளும் நவீன ஆண்களுக்கான ஸ்டைல் மற்றும் நுட்பமான உணர்வை எடுத்துக்காட்டும் வகையில் தொலைநோக்கு சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.”
மேலும் இது குறித்து, ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியதாவது: “எங்கள் வாடிக்கையாளரின் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணங்களையும் மேம்படுத்தும் நகைகளை வழங்குவதே ஜிஆர்டியின் அர்ப்பணிப்பு ஆகும். இந்த மென்’ஸ் கலெக்ஷன் எந்தவொரு ஸ்டைலையும் அழகுப்படுத்தும். அது கேசுவல், ஃபார்மல் அல்லது எத்தினிக் என எதுவாக இருந்தாலும்; எங்களுடைய அசைக்க முடியாத தரம் மற்றும் சிறப்பான நிலையை பிரதிபலிக்கும் வகையில்
வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்போது எங்களின் அனைத்து ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் ஷோரூமிலும் இந்த கலெக்ஷன்கள் கிடைக்கும்.”