முதல்வர் ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டபோது, தமிழ்நாட்டில் அமைச்சரவை மாற்றம் குறித்த தகவல்கள் வெளியாகி பரபரப்பானது. முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கப் பயணம் முடிந்ததும் அமைச்சரவையில் மாற்றம் நிகழும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. இது குறித்த கேள்விகள் எழும்போதெல்லாம், “கோரிக்கை வலுத்திருக்கிறது; பழுக்கவில்லை” என பூடகமாகவே பதிலளித்துவந்தார் முதல்வர் ஸ்டாலின். அதைத் தொடர்ந்து, ‘அமைச்சரவை மாற்றத்தில், துணை முதல்வராக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படுவார்’ எனப் பேசப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக அமைச்சர்களிடம் கேள்வி எழும்போதெல்லாம், இதை உறுதியாக யாரும் மறுக்கவில்லை. பெரும்பாலான அமைச்சர்கள் ஆதரவு குரலிலேயே பேசிவந்தனர். இந்த நிலையில், இன்று சென்னை கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசியபோது, “அமெரிக்கப் பயணம் குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், எதிர்க்கட்சித் தலைவரின் வெள்ளை அறிக்கை எந்தளவு இருந்தது என நமக்குத் தெரியும். இதில் ஏமாற்றும் நிதி ஒதுக்கீடு கிடையாது. ஏற்கெனவே இது குறித்து அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெளிவாக விளக்கமளித்திருக்கிறார். அதுவே வெள்ளையறிக்கைதான்… தொடர்ந்து அமைச்சரவை மற்றம் குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது. `மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது’.” எனக் குறிப்பிட்டார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb