சிறந்த லாபத்தை ஈட்டித் தருகிறது ஈவி ஸ்டேஷன் முதலீடு!

சுற்றுச்சூழலை பாதிக்காத, அதே சமயம் எதிர்காலத்தில் அதிகளவிலான தேவை இருக்கும் சேவை என யோசித்து எடுத்த முடிவு இது. இன்று இந்தியா முழுவதும் சுமார் 250க்கும் மேற்பட்ட இடத்தில் ஈவி சார்ஜிங் ஸ்டேஷனை நிறுவி தமிழகத்தில் எலக்ட்ரிக் கார் வைத்திருக்கும் அனைவருக்கும் பரிச்சயமாகி இருக்கும் நிறுவனம் `ரிலெக்ஸ் எலெக்ட்ரிக்’. எதிர்காலத்தை முன்வைத்து இன்று புதிதாகத் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சிறந்த தொழிலாக ஈவி சார்ஜிங் ஸ்டேஷன் இருக்கும்” என நம்பிக்கை கொடுக்கிறார் `ரிலெக்ஸ் எலெக்ட்ரிக்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கார்த்திகேயன் சாந்தாராம். இதுகுறித்து அவர் மேலும் விவரிக்கிறார்.

“2009ல் `ரிலெக்ஸ் ஹாலிடேஸ்’ என்ற எக்கோ-டூரிஸம் கம்பெனி தொடங்கினோம். நான் செய்யும் எந்தச் செயலும் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் இருக்கிறதா என்பதில் கவனமாக இருப்பேன். எடுத்துக்காட்டாக நான் பயன்படுத்தும் கார், பேனா, உடை, ஏடிஎம் கார்டு என அனைத்துமே சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத பொருட்களே.

திரு. கார்த்திகேயன் சாந்தாராம்,
நிர்வாக இயக்குநர், ரிலெக்ஸ் எலெக்ட்ரிக்

2009 காலகட்டத்தில் ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்ததில் கவனித்து வியந்தது, அங்குள்ள எலக்ட்ரிக் கார் சார்ஜிங் ஸ்டேஷன். சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து போன்ற நாடுகளில் ஒரு காரை 40 நிமிடங்கள் வரை பொது இடத்தில் உள்ள சார்ஜ் ஸ்டேஷனில் சார்ஜ் போட்டுவிட்டு வெளியே நிற்கலாம். நம்முடைய நேரத்தையும் பயனுள்ள வகையில் அருகில் உள்ள கடை அல்லது உணவகத்திலோ செலவிடலாம். அந்த மாடல் சார்ஜிங் ஸ்டேஷன்களை நம்ம சென்னைக்கும் கொண்டு வந்தால் என்ன என்ற உத்வேகத்தில் 2012ல் `ரிலெக்ஸ் எலெக்ட்ரிக்’ சார்ஜ் ஸ்டேஷன் நிறுவனத்தை தொடங்கினேன். அதுமட்டுமல்லாது இந்திய மக்கள்தொகைக் கணக்கின் படி 5 நிமிடம் நின்று சென்றாலே 80,000 பெட்ரோல் பங்குகள் தேவைப்படும் நிலையில் 40 நிமிடங்கள் நின்று சார்ஜ் செய்ய வேண்டுமெனில் எத்தனை ஈவி ஸ்டேஷன் வேண்டும் என யோசித்துப் பாருங்கள். எதிர்காலத்தில் இதன் தேவை பல மடங்கு பெருக வாய்ப்புள்ளது என்பதைப் புரிந்து கொண்டோம். ஆரம்பத்தில் தமிழ்நாட்டில் வரவேற்பு குறைவாக இருந்தாலும், 2019-க்குப் பிறகு ஈவி வாகனங்களின் வருகையினால் இந்தியா முழுவதும் எங்கள் நிறுவனத்திற்கு கிடைக்கும் வரவேற்பு அதிகமாகியுள்ளது” என்றார்.

நிறுவன மேலாண் இயக்குநர் ரவி சங்கர் கூறுகையில், “ரிலெக்ஸ் எலெக்ட்ரிக் நிறுவன சார்ஜர் அனைத்தும், `மேக் இன் இந்தியா’ குறிக்கோளை மையப்படுத்தி 90% பாகங்கள் உற்பத்தி இந்தியாவிலேயே நடைபெறுகிறது. இதன் உதிரிபாகங்களின் டிசைன்களை நாங்களே வடிவமைத்து இந்திய முன்னணி உற்பத்தியாளர்கள் மூலம் பெறுகிறோம்” என்றார்.

மேலும் தொடர்ந்த, நிறுவனர் கார்த்திகேயன் சாந்தாராம் “இந்த EV சார்ஜிங் ஸ்டேஷனை நிறுவுதலும் மிக எளிதுதான். பெட்ரோல் பங்கிற்குத் தேவைப்படும் இடமும், வேலையாட்களும், பராமரிப்பும் இதில் கிடையாது. சிங்கிள் கன் பயன்பாடு என்றால் வெறும் ரூ.30,000 முதலீட்டில் ஹோம் சார்ஜிங் ஸ்டேஷன் தொடங்கிவிடலாம். பெரும் வணிக இடமென்றால் 5 லட்சம் முதலீட்டிலிருந்து சார்ஜிங் ஸ்டேஷன் தொடங்கலாம். இதில், கேரண்டியாக மாதத்திற்கு 3 லட்சம் வருமானம் கிடைக்கும். உறுதியாக முதலீட்டைத் திரும்பப் பெறும் கால அளவு 3 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும்.

தங்களுடைய வணிகக் கட்டடத்தின் முன் சார்ஜிங் ஸ்டேஷன் நிறுவுவதில் உள்ள லாபம், வெறும் வாகனங்கள் சார்ஜ் செய்து செல்வதால் கிடைக்கும் வருமானம் மட்டும் இல்லை. இது அலைடு பிசினஸ். காரணம், வாகனம் சார்ஜ் ஆக 40 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும் என்றால் கண்டிப்பாக வாடிக்கையாளர்கள் உங்கள் வணிக கட்டடத்தையும் பயன்படுத்திக் கொள்வார்கள். இதன் மூலம், சார்ஜிங் போர்ட் நிறுவினால் கிடைப்பது இரட்டிப்பு லாபம் தானே!

நாங்கள் நிறுவும் அத்தனை சார்ஜிங் ஸ்டேஷனையும் 24/7 கண்காணித்து வருகிறோம். 6 மொழிகள் பேசும் வாடிக்கையாளர்கள் சேவை இருக்கிறது. இது AI தொழில்நுட்பத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால், சார்ஜிங் போர்ட்டில் எந்தக் கோளாறு என்றாலும் எங்கள் தலைமை அலுவலகத்திற்கு தகவல் வந்துவிடும். தகவல் வந்த 48 மணி நேரத்திற்குள் கோளாறை எங்கள் தொழில்நுட்பக்குழு நேரடியாகச் சென்று சரி செய்து விடுவார்கள்.

`ரிலெக்ஸ் எலெக்ட்ரிக்’ மொபைல் அப்ளிகேஷனைப் பயன்படுத்தி எங்களது சார்ஜிங் ஸ்டேஷன் இந்தியாவில் எங்கெங்கெல்லாம் உள்ளன, அங்கு செல்வதற்கான வழி எதுவென அனைத்தையும் அதிலிருந்து பெற்றுவிட முடியும்.

இதில் பெரிய வசதி, ஈவி ஸ்டேஷன் முழுவதும் ஆட்டோமேட்டிக் என்பதால் வேலையாட்களும் தேவைப்பட மாட்டார்கள். 3 மாதத்திற்கு ஒரு முறை நாங்களே நேரில் வந்து பரிசோதித்து விடுவோம்.

ஈவி ஸ்டேஷன் நிறுவ போதிய இடம் இல்லை என நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு நாங்களே இடத்தையும் பரிந்துரை செய்து விடுவோம். உங்களுடைய சொந்த இடமென்றால், எங்கள் மார்க்கெட்டிங் டீம் உங்களை அணுகி இடத்தின் அமைப்பு, பட்ஜெட், போதிய மின்சார வசதி, மக்கள் வந்து செல்ல ஏதுவான இடமா என்பது வரை அனைத்தையும் ஆராய்வர்கள். பிறகு எத்தனை போர்ட் வைக்கலாம் என்பது வரை பரிந்துரை செய்து விடுவார்கள்.

அப்படி தமிழகத்தில் நாங்கள் முதலில் தொடங்கிய இடம் திருவண்ணாமலை. பிறகு ஆந்திராவில் திருப்பதி, கர்நாடகாவில் உடுப்பி, மகாராஷ்டிராவில் சீரடி என தொடர்ந்து 250 இடங்களுக்கும் மேல் ஈவி ஸ்டேஷனை நிறுவியுள்ளோம்.

இதற்கு அடுத்த கட்டமாக சென்னை-தூத்துக்குடி, சென்னை-பெங்களூரு, சென்னை-விசாகப்பட்டினம், பெங்களூர்-கோவை போன்ற வழித்தடங்களில் ஈவி டிரக் மற்றும் ஈவி பஸ் நின்று சார்ஜ் செய்யும் ஹப்பை திறக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கென ஈவி ஸ்டேஷன் இன்னும் அட்வான்ஸுடாகவும், வேகமாகவும் இருக்க எங்கள் சார்ஜ் போர்ட் கன் DC மின்சார வசதியுடன் வரவிருக்கிறது.

முதல் தலைமுறையாக ஈவி ஸ்டேஷன் தொழில் தொடங்குவோரை ஊக்குவிக்கும் விதமாக முதலீட்டில் சலுகை கொடுக்கிறோம். ஸ்டேஷனை கண்காணிக்கவும், பராமரிக்கவும் தனியாக ஆள் தேவையில்லை என்பதால் ஓய்வு பெற்ற முதியவர்களுக்கும் இது சிறந்த பிசினஸ் ஐடியாவாக இருக்கும். ஒன்றிய அரசின் PM E-Drive திட்டம் ஈவி ஸ்டேஷன் தொடங்குவதற்கான சிறந்த சலுகைகளையும் வழங்கி ஆதரித்து வருகிறது.

எதிர்காலத்தில் சிறந்த லாபத்தை ஈட்டும் தொழிலாகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் செயலாகவும் யோசித்தால் `ஈவி ஸ்டேஷன்’ தொடங்குவது சிறந்த முடிவாக இருக்கும்” என்கிறார் நம்பிக்கையுடன்.

தொடர்புக்கு: 8825 80 8825