சிறு குறு வியாபாரங்களை வளமாக்கும் டிஜிட்டல் மார்க்கெட்டிங்! – எப்படி?

முன்பெல்லாம் ஒரு தொழில் துவங்குவதாக இருந்தால் அந்தப் பகுதியில் வரும் பத்திரிகைகளில் பெரிய விளம்பரம் அளிக்க வேண்டும், ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்ட வேண்டும், விளம்பர போர்டுகள் வைக்க வேண்டும் என்ற நிலை இருந்தது.

புதிதாக ஒரு தொழில் துவங்கப்பட்டுள்ளது என்பது குறைந்தபட்சம் அந்தப் பகுதியில் உள்ள ஒரு 5,000 பேருக்காவது தெரிந்திருந்தால்தான், அந்தப் பகுதியில் நல்ல வரவேற்பைப் பெற முடியும். ஆனால் இன்று நிலைமை அப்படியில்லை, உலகமே கணினி மயமாகிவிட்டது.

தமிழகத்தின் ஒரு பகுதியில் ஒரு தொழில் துவங்கப்பட்டால் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கு மட்டும் உங்கள் விளம்பரத்தை கொண்டு போய் சேர்க்க முடியும். அதுவும், உங்கள் தயாரிப்புகளைக் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் கொண்டு போய் சேர்க்க முடியும் என்கிற அளவுக்கு சாத்தியமாகியுள்ளது டிஜிட்டல் மார்க்கெட்டிங்.

ஒரு ஃபேஸ்புக் அக்கவுண்ட் இருந்தால் போதும், உங்கள் பொருளை உங்கள் இடத்துக்கே வந்து வாங்கிச் செல்வார்கள். ஒரு ஜி-மெயில் அக்கவுண்ட் இருந்தால் போதும், உங்கள் தயாரிப்பை யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம் என்ற நிலையை உருவாக்கியுள்ளது இந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் முறை.

கடந்த 10 வருடங்களாக, டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருவதுடன், டிஜிட்டல் மார்க்கெட்டிங் மீது ஆர்வம் உள்ளவர்களுக்கும், அதைக் கற்றுத்தரும் இடத்தில் இருக்கிறார் சோசியல் ஈகிள் என்ற நிறுவனத்தின் இயக்குநரும், சோசியல் மீடியா எக்ஸ்பெர்ட்டுமான திரு.தரணீதரன்.

“தொழில் முனைவோர்கள் பலருக்கு தற்போதைய ட்ரெண்டிற்கு ஏற்ப வளர்ந்து வரும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பற்றித் தெரியாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பது எல்லாத் தரப்பு மக்களுக்கும் பயன் தரக்கூடிய ஒரு தொழில் முறை. `எவ்வளவு நேரம் வேலை செய்து என்ன பயன், பணத்தை மிச்சம் பண்ணமுடியலையே பாஸு’ என ஃபீல் செய்யும் இளைஞர்கள் முதல், கணவனிடம் காசு கேட்காமல் தாங்களே சம்பாதிக்கவேண்டும் என்று விரும்பும் பெண்கள் வரை அனைவருக்குமானது இந்த தொழில்.

திரு. தரணீதரன்,
இயக்குநர்,
சோசியல் ஈகிள்

குறிப்பாக, சொந்தமாக தொழில் ஆரம்பித்து, தங்களின் அனைத்து வித தயாரிப்புகளையும் /சேவைகளையும் மக்களிடம் இணையதளம் மூலம் கொண்டு சேர்க்க நினைப்பவர்களுக்கு அவசியம் டிஜிட்டல் மார்கெட்டிங்கைப் பற்றி சிறிதளவு புரிதல் இருக்கவேண்டும்.

இதற்கான ட்ரெய்னிங் சென்டராகத் தான் சோசியல் ஈகிள் தற்போது செயல்பட்டுவருகிறது. ஆனால், இந்நிறுவனத்தை முதலில் ஒரு டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஏஜென்சியாக 2015-ல் ஆரம்பித்தோம். 20-க்கும் மேற்பட்ட ஊழியர்களின் துணையோடு, கிட்டத்தட்ட 10 வருடங்களாக இத்துறையில் இயங்கி வருகிறோம்.

சோசியல் ஈகிள் தற்போது, மூன்று விதமாக செயல்படுகிறது. ஒரு டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஏஜென்சியாக நிறுவனங்களின் தயாரிப்புகளை/சேவைகளை பல்வேறு விதமாக இணையதளங்கள் மூலம் விளம்பரம் செய்வதுடன், அந்த விளம்பரம் மக்களிடம் எப்படி சேர்கிறது, விளம்பரங்களைப் பற்றி மக்களின் எண்ண ஓட்டம் எப்படி இருக்கிறது ஆகியன முதல் எல்லாவற்றையும் கண்காணிக்கும் இடத்திலும் இருக்கிறோம். மேலும், டிஜிட்டல் மார்கெட்டிங்கை முறைப்படி கற்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு 1 மாத காலம் இன்டென்சிவ் கோர்ஸ் வழங்கப்படுகிறது. பல டிஜிட்டல் மீடியா வல்லுனர்களின் வழிகாட்டுதலோடு வழங்கப்படும் இகோர்சில் 21 மோடியூல்கள். மூன்றாவது கட்டமாக, தேர்ச்சி பெற்றவர்களுக்கு சில நிறுவனங்களின் விளம்பரங்களைக் கண்காணிக்கவும் / புது விளம்பரங்களை உருவாக்கித் தரவும் அவர்களுக்கு நடைமுறைப் பயிற்சியும் வழங்கப்படுகிறது.

எங்களிடம் பயிற்சி பெற்றவர்கள், எங்களின் பணியாளர்களாகவும் வளர்ந்து, தற்போது டிஜிட்டல் மார்க்கெட்டிங்கைப் பற்றி மற்றவர்களுக்கு கற்பிக்கும் இடத்திற்கு உயர்ந்திருக்கிறார்கள். பல பேருக்கு இதன் மூலம் MNC நிறுவனங்களிலும் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வு செம்மை அடைந்திருப்பது, எங்களுக்கு எப்போதும் பெருமையே” என்கிறார் திரு.தரணீதரன்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் எனும் கருவியை, வெற்றிகரமாக உபயோகித்தவர்களுள்திரு.தரணீதரனும் ஒருவர். அது மட்டுமல்ல, அவர் பெற்ற வெற்றியைப் பலரும் பெற வேண்டும் என்று முனைப்புடன் செயல்படும் சோசியல் ஈகிளின் அர்ப்பணிப்பு என்றும் பாராட்டுக்குரியது.

ஸ்மார்ட் போன்களின் வருகை அதிகரித்துள்ள இந்த காலத்தில், ஃபேஸ்புக், ட்விட்டர்,யூ-ட்யூப், இன்ஸ்டாகிராம் என விளம்பரங்கள் மூலம் எளிதில் எந்தக் கருத்தையும், பொருட்களையும், சேவைகளையும் மக்களிடம் கொண்டு சேர்த்துவிடமுடியும், டிஜிட்டல் மார்க்கெட்டிங்கின் நுணுக்கங்களின் துணையோடு.