Vels University: செண்டை மேளம் முழங்க அத்தப்பூ கோலத்துடன் ஆடிப்பாடி ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

செண்டை மேளம் முழங்க அத்தப்பூ கோலத்துடன் ஆடிப்பாடி ஓணம் பண்டிகை மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் கொண்டாடினர்.

கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரள மாநிலத்தில் கொண்டாடக்கூடிய முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை தற்போது தமிழகத்திலும் கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் சென்னையை அடுத்த பல்லாவரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், டெக்னாலஜி மற்றும் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ்(விஸ்டாஸ்) பல்கலைக்கழகத்தில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தங்களின் வீடு தேடி வரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக பூக்களை வைத்து அத்தப்பூ கோலம் போடுவது இந்த பண்டிக்கையில் முக்கிய அம்சமாகும். அதே போல ஒவ்வொரு பாடப் பிரிவுகளை சேர்ந்த மாணவர்கள் அவர்கள் பிளாக் முன்பு அழகான அத்த பூக்களை கொண்டு கோலங்கள் போட்டனர். சிறப்பாக கோலம் போட்ட மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. மாணவிகள் கோலத்தை சுற்றி நின்று அழகாக ஆடிப்பாடி குழு புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.

வேல்ஸ் பல்கலைக்கழகம் | ஓணம்

வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவன வேந்தர் டாக்டர்.ஐசரி.கே.கணேஷ், வேல்ஸ் குழுமங்களின் துணைத் தலைவர் டாக்டர். ப்ரீத்தா கணேஷ் ஆகியோரும் மாணவர்களுடன் இணைந்து ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். செண்டை மேளம் முழங்க தொடங்கிய ஓண கொண்டாட்டங்கள் விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றன. பேராசிரியர்கள் மாணவர்கள் என பாகுபாடு இல்லாமல் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு விவேகத்துடன் விளையாடி பரிசுகளை வென்றனர்.

”ஆண்டுதோறும் எங்கள் பல்கலைக்கழகத்தில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். இதற்கு அனுமதி அளிக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். பொங்கல் பண்டிகையைப்போலவே ஓணமும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருவதை நீங்களே காணலாம்” என பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு படித்து வரும் கேரள மாணவி தெரிவித்தார்.

வேல்ஸ் பல்கலைக்கழகம் | ஓணம்

வேல்ஸ் பல்கலைக்கழகம்

2008 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தின் MHRD ஆல் அங்கீகரிக்கப்பட்ட பல்கலை க்கழகமாக அறிவிக்கப்பட்ட VISTAS, செ ன்னையில் 100 ஏக்கர் பரப்பளவில் மூன்று வளாகங்களைக் கொண்ட தமிழ்நாட்டின் பல்துறைப் பல்கலைக்கழகம் என்ற தனிச்சிறப்பைப் பெற்றுள்ளது. மருத்துவம், நர்சிங், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், வேளாண்மை, கடல்சார் ஆய்வுகள், சட்டம், கலை மற்றும் அறிவியல் பொன்ற பல்வேறு துறைகளில் UG முதல் Ph.D வரையிலான திட்டங்களை VISTAS வழங்குகிறது.