உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை திமுக வட்டாரத்தில் அடிக்கடி பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலையில் உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி கொடுக்கப்படும் என்ற தகவல் பரவியது.
இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி, துணை முதல்வர் பதவி குறித்த கேள்விக்குப் பதிலளித்துள்ளார். ‘இன்று 11 மணிக்கு உங்களுக்குத் துணை முதல்வர் பதவி கொடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியிருக்கிறதே?’ என்று செய்தியாளர் கேட்டதும் ஷாக் ரியாக்ஷன் கொடுத்த உதயநிதி, “நான் இன்னைக்கு அண்ணா நூற்றாண்டு நூலகம் வந்துட்டேன். அறிவாலயமே போகலை. தொண்டர்கள் அவர்களது விருப்பத்தைத் தெரிவித்திருக்கின்றனர். நேற்று பழனிமாணிக்கம் அவர்கள் அந்த விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.
எந்த முடிவானாலும் முதலமைச்சர் எடுப்பார். அமைச்சர்கள் எல்லாருமே முதலமைச்சருக்கு துணையாகத்தான் இருக்கிறோம். துணை முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பது முழுக்க முழுக்க அவரின் தனிப்பட்ட முடிவு.” எனப் பதிலளித்தார்.
அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய் பெரியார் பிறந்த நாளில் அவரது சிலைக்கு மாலையிட்ட நிகழ்வைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பப்பட்டபோது, “நல்ல விஷயம் தான். யாராக இருந்தாலும் தமிழ்நாட்டில் பெரியாரைத் தாண்டி, பெரியாரை மீறி, பெரியாரைத் தொடாமல் அரசியல் செய்ய முடியாது. நண்பர் விஜய்க்கு என் வாழ்த்துகள்” எனப் பதிலளித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY