உத்தரப்பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ சரிதா பதவுரியா, வந்தே பாரத் ரயிலுக்கு கொடி அசைத்தபோது, தண்டவாளத்தில் தவறி விழுந்துள்ளார்.
எட்டாவா சந்திப்பில் நேற்று மாலை 6 மணிக்கு ஆக்ரா கான்ட்-பனாரஸ் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலைக் கொடியசைத்து துவக்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் சமாஜ்வாடி கட்சி எம்.பி ஜிதேந்திர டவ்ஹரே, முன்னாள் பா.ஜ.க எம்பி ராம் சங்கர், தற்போதைய எம்.எல்.ஏ சரிதா பதவுரியா ஆகியோர் கலந்துகொண்டனர்.
பச்சைக் கொடியை பிடித்துக்கொண்டு முன் வரிசையில் நின்றிருந்தார் எம்.எல்.ஏ. கூட்டம் அதிகமானதால் பாதுகாப்பு அதிகாரிகள் நெருக்கடியைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். ரயில் ஹாரன் சத்தம் எழுப்பவும் ஏற்பட்ட சலசலப்பில் முன்வரிசையில் இருந்த எம்.எல்.ஏ தண்டவாளத்தில் விழுந்துவிட்டார்.
அருகில் இருந்த கட்சியினரும் பாதுகாப்பு அதிகாரிகளும் உடனடியாக அவரைத் தூக்கி விட்டனர். பலத்த காயம் இல்லாததால் நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடைபெற்றது. நிகழ்ச்சியின்போது சமாஜ்வாடி மற்றும் பா.ஜ.க கட்சியினர் இடையே சலசலப்பு ஏற்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs