GST: “பிரச்னையை பெரிதுபடுத்தாமல் கடந்து செல்வதே நல்லது” – அன்னபூர்ணா நிர்வாகம்

கோவையின் பிரபல அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், ஜி.எஸ்.டி வரியில் உள்ள சிக்கல்கள் குறித்து நிர்மலா சீதாராமனிடம் பேசியது பெரும் பேசுபொருளாகியிருந்தது.

அடுத்த சில மணி நேரங்களில் வானதி சீனிவாசன் முன்னிலையில் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் மன்னிப்பு கேட்பது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி, இந்த விவகாரத்தில் இன்னும் சூட்டை கிளப்பிவிட, ‘அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் கேட்ட ஜி.எஸ்.டி குறித்த கேள்வி நியாயமானதுதான்’ என ஆதரவு குரல்கள் எழுந்தன. இந்த விவகாரத்தில் ‘அன்னபூர்ணா சீனிவாசனை மன்னிப்புக் கேட்க வைத்தது ஆணவத்தின் உச்சம்’ என அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது கண்டங்களைத் தெரிவித்திருந்தனர்.

கோவை அன்னபூர்ணா பிரச்னை

இந்நிலையில் தற்போது இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அன்னபூர்ணா உணவக நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், “நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களிடம் ஜிஎஸ்டி குறித்துக் கேட்கப்பட்ட கேள்வி தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு சமூகவலைதளங்களில் வைரலானது.

எங்கள் அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், தாமாக முன்வந்து நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனைச் சந்தித்து, தான் பேசியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருப்பது குறித்து எடுத்துரைத்தார். தனிப்பட்ட முறையில் நாங்கள் சந்தித்து உரையாடியக் காணொலி சமூகவலைதளங்களில் வெளியிடப்பட்டு, இந்த விவகாரத்தை இன்னும் பெரிதாக்கிவிட்டது

இதற்காக தமிழ்நாடு பாஜக தரப்பிலிருந்து மன்னிப்பும் கேட்கப்பட்டுவிட்டது. இதற்குமேல் இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்திச் சர்ச்சையைக் கிளப்ப வேண்டாம். அரசியல் உள்நோக்கங்கள், தவறான புரிதலோடு கருத்துத் தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தாமல், இதைக் கடந்து செல்வதே நல்லது” என்று கூறியிருக்கிறது அன்னபூர்ணா நிர்வாகம்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY