“இந்தியாவில் இருக்கும்வரை ஷேக் ஹசினா அமைதியாக இருக்க வேண்டும்” என்று சமீபத்திய நேர்காணலில் வங்கதேசத்தின் புதிய இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் கூறியிருக்கிறார்.
சமீபத்தில் PTI, முகமது யூனுஸை பேட்டி எடுத்துள்ளது. அதில், “ஷேக் ஹசினா அவ்வப்போது பேசி வரும் பேச்சுகள் எதுவும் யாருக்கும் பிடிக்கவில்லை. இந்தியாவில் இருந்துகொண்டு அவர் பேசும் அனைத்தும் பிரச்னைக்குரியதாக இருக்கிறது.
ஒருவேளை அவர் அமைதியாக இருந்தால் நாங்களும், மக்களும் அனைத்தையும் மறந்திருப்போம். ஆனால் அவர் இந்தியாவில் இருந்துக்கொண்டு எதாவது பேசுவதும், எங்களுக்கு வழிமுறைகள் கொடுத்துக்கொண்டும் இருக்கிறார். இது யாருக்குமே பிடிக்கவில்லை.
மேலும் இது இந்தியாவுக்கும் நல்லதல்ல…எங்கள் நாட்டிற்கும் நல்லதல்ல. வங்காளதேசம் ஷேக் ஹசீனாவை திரும்ப அழைக்கும் வரை, இந்தியா தனது நாட்டில் அவரை வைத்திருக்க வேண்டுமானால், அவர் அமைதியாக இருக்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி, “வங்களாதேசத்தில் நடந்த தீவிரவாத செயல்கள், கொலைகள், கலவரங்களுக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து தண்டனை கொடுக்க வேண்டும்” என்று ஷேக் ஹசினா கூறியதைத்தான் இவர் இங்கு குறிப்பிடுகிறார்.