சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூர் உள்ள தனியார் கல்லூரியில் ஆந்திர மாநிலம் செகந்திராபாத் பகுதியைச் சேர்ந்த கொண்டா ஸ்ரீனிவாச நிக்கில் (20) என்றவர் பி.டெக் நான்காம் ஆண்டு படித்து வந்தார். இவர் சென்னை அடுத்த பொத்தேரியில் `அப்போட் வேலி’ என்ற தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தனது நண்பர்களுடன் தங்கி இருந்தார். இந்த குடியிருப்பில் தங்கி, ஏராளமான மாணவர்கள் அந்த பகுதியில் இருக்கும் கல்லூரிகளில் பயின்று வருகின்றனர்.
இந்த அடுக்குமாடி குடியிருப்பில், தாம்பரம் மாநகர காவல்துறை சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான போலிஸாருடன் கடந்த சில நாள்களுக்கு முன்பு அதிரடி ரெய்டு ஒன்றை நடத்தினர். கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் கலாசாரம் அதிகமாக இருப்பதாக போலீஸாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில்தான் இந்த ரெய்டு நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. அதன்படி சந்தேகத்தின் பெயரில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றது போலீஸ். இதில் நிக்கிலும் ஒருவர். அதன்படி, மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போலீஸார், அவர்களின் விவரங்களை வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், நிகில் தான் தங்கிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் 4-வது மாடியில் இருந்து செப்-3-ல் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த விவகாரம் குறித்து தாம்பரம் போலீஸாரிடம் விசாரித்தபோது, ” காட்டாங்குளத்தூர், பொத்தேரி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் விடுதி, அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏராளமான மாணவர்கள் தங்கி அருகில் இருக்கும் கல்லூரிகளில் பயின்று வருகிறார்கள். இவர்கள் மத்தியில் போதை கலாசாரம் பெருகி வருவதை எங்களின் ரகசிய கண்காணிப்பில் தெரிந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்திடமும் தெரியப்படுத்தினோம்.
இந்நிலையில், மாணவர்களுக்கு போதை பொருளை சப்ளை செய்பவர்களை பிடிக்க, ஒரே நேரத்தில் அப்பகுதியில் மெகா ரெய்டை நடத்தினோம். இதில் மாணவர்கள் பலரும் கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதை பொருள்களை பயன்படுத்துவது தெரிந்தது. அவர்களை முறைப்படி அழைத்து விசாரணை மேற்கொண்டோம். தொடர்ந்து, கஞ்சா விற்பனை செய்த ரெளடி செல்வமணியையும் கைது செய்திருக்கிறோம். இந்த விவகாரத்தில் விசாரணைக்குள்ளான மாணவர்களிடம் அவர்களின் பெற்றோர்களை அழைத்து வரசொல்லி இருக்கிறது கல்லூரி நிர்வாகம்.
இதில் நிக்கிலின் பெற்றோர் வரதாதால், கல்லூரி நிர்வாகம் கண்டித்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக சம்பவதன்று நிக்கில் தனது பெற்றோரிடம் போனில் பேசிக் கொண்டு இருக்கும்போதே, வாக்குவாதம் ஆகியிருக்கிறது. இதனால், பேசிக் கொண்டிருக்கும்போதே மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து இருக்கிறார். இதுகுறித்து மேற்கண்ட விசாரணை நடந்து வருகிறது.” என்றனர்.
‘போலீஸார் விசாரணைக்கு அழைத்து சென்றதால், நிக்கில் மன உளைச்சலில் இருந்தார். அதனால்தான் தற்கொலை செய்துக் கொண்டார்’ என்கிறார்கள் உடன் படிக்கும் கல்லூரி மாணவர்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY