Caste Census Explained: `ஏன் வேண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு?’ – 10 உண்மைகள்

‘அறிவின் சமூகவியல்’ என்று சமூகவியலில் ஒரு சிறப்புப்பிரிவை உருவாக்கியவர் ஹங்கேரி நாட்டு சமூகவியல் அறிஞர் கார்ல் மேன்ஹெய்ம். ஒரு சமூகத்தின் சூழல், அங்கே வழக்கத்தில் இருக்கும் நடைமுறைகள் ஆகியவை அங்கு வசிக்கும் மனிதர்களின் சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதே மேன்ஹெய்ம் தன் ஆய்வுகள் மூலம் கண்டறிந்த உண்மை. சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து நம் தேசத்தில் நடந்துவரும் விவாதம், மேன்ஹெய்ம் சொன்ன கருத்துக்குச் சரியாகப் பொருந்தும் உதாரணம்.

நன்கு படித்த, முற்போக்காக சிந்திக்கின்ற இந்தியர்கள்கூட இந்த விஷயம் பற்றிப் பேசுகிறபோது வைக்கின்ற வாதம் என்னை அதிர்ச்சிகொள்ளச் செய்கிறது. சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு எழும் எதிர்ப்பின் காரணமாக, நிறைய அரை உண்மைகள் பரப்பப்படுகின்றன. நிஜமான உண்மையைத் திரை போட்டு மறைப்பதற்காக இவற்றைப் பரப்புகிறார்கள்.

இவற்றில் அதிகமாகப் பரப்பப்படும் 10 அரை உண்மைகளை இங்கே காணலாம்…