UP: 2 லட்ச அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை நிறுத்திய யோகி அரசு? – சொத்து விவரங்களை பதிவிடாததால் அதிரடி

சொத்து விவரங்களைத் தெரிவிக்காத 2.44 லட்சம் அரசு ஊழியர்களுக்கு உத்தரப் பிரதேச அரசு சம்பளம் வழங்காமல் நிலுவையில் வைத்திருக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி உத்தரப் பிரதேச அரசு வெளியிட்ட உத்தரவில், அனைத்து அரசு ஊழியர்களும் தங்களிடம் உள்ள அசையும் சொத்துகள், அசையா சொத்துகள் பற்றிய விவரங்களை உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

சொத்து விவரங்களை தெரிவிக்காத அரசு ஊழியர்களின் சம்பளம் வழங்கப்படாது என்று உ.பி. உ.பி அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

யோகி ஆதித்யநாத்

இந்த நிலையில், ஆகஸ்ட் 31-ம் தேதி வரை சுமார் 71 சதவிகித ஊழியர்கள் மட்டுமே தங்களிடம் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களைத் தெரிவித்துளனர். மீதமுள்ள 29% ஊழியர்கள் தங்களிடம் இருக்கும் சொத்து விவரங்கள் பற்றி அரசிடம் முறைப்படி எதுவும் சொல்லவில்லை என்ற தகவல் வெளியானது. இவர்களிடம் உள்ள சொத்துகள் பற்றிய விவரங்களை சொன்னால், தங்கள் மீது வழக்கு தொடுக்கப்படும்; தாங்கள் அரசின் விசாரணைக்கு உள்ளாக வேண்டியிருக்கும் என்று பயந்ததால், இவர்கள் சொத்து பற்றிய விவரங்களைத் தரவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதனால், 2.44 லட்சம் அரசு ஊழியர்களுகான ஆகஸ்ட் மாத சம்பளத்தை வழங்காமல் மாநில அரசு நிலுவையில் வைத்திருக்கிறது என்கிறார்கள். மேலும், அக்டோபர் 2-ம் தேதி வரை அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை தெரிவிக்கலாம் என கால அவகாசம் வழங்கி இருக்கிறது.

யோகி ஆதித்யநாத்
உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேச மாநில அரசின் கீழ் 8,46,640 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதில் 6,02,075 பேர் மட்டுமே சொத்து விவரங்களைத் தெரிவித்துள்ளனர்.

துறை ரீதியாக எடுத்துக்கொண்டால், பணியாளர், ஜவுளி, காவல்துறை நலன், மின்சாரம், விளையாட்டு, வேளாண்மை, மகளிர் நலன் ஆகிய துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் அதிகளவில் சொத்து விவரங்களைத் தெரிவித்துள்ளனர்.

கல்வித் துறையைச் சேர்ந்த ஊழியர்கள் சொத்து விவரங்களை சரியாக தெரிவிக்கவில்லை. தவிர, உயர்கல்வி, மருத்துவம், தொழில் துறை வளர்ச்சி, வருவாய் ஆகிய துறைகளில் ஊழியர்கள் சொத்து விவரங்களைத் தெரிவிக்க மறுத்து வருகின்றனர் என்கிறார்கள்.

அரசு ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் சொத்து விவரங்களைத் தெரிவித்தால் மட்டுமே சம்பளம் விடுவிக்கப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உ.பி அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது மாதிரியான ஒரு உத்தரவை தமிழக அரசாங்கம் பிறப்பித்தால் எப்படி இருக்கும்?

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY