Jharkhand: காவலர் உடற்தகுதித் தேர்வில் 11 பேர் மரணம் – வழக்குப் பதிந்த காவல்துறை
ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த காவலர் உடற்தகுதித் தேர்வில் பங்கேற்ற 11 போட்டியாளர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
உடற்தகுதித் தேர்வில் 10 கிலோ மீட்டர் தூரம் உச்சி வெயிலில் ஓடிய 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மயங்கி விழுந்துள்ளனர். பணியிலிருந்து காவலர்கள் அவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர்களில் 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் சிலர் ஊக்க மருந்து உபயோகித்திருக்கலாம் அல்லது தேர்வுக்கு முன்னர் எனர்ஜி ட்ரிங்குகளை குடித்திருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.
நீண்ட நேரம் வரிசையில் நின்றதும், சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாகவும் இருக்கலாம் என்றும் கூறியிருக்கின்றனர். இறந்தவர்கள் தொடர்பாக ‘இயற்கைக்கு மாறான மரணம் (unnatural death)” வழக்குப் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.