புதுக்கோட்டையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வருகை தந்த சசிகலாவின் சுதாகரர் திவாகரன், பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தலித் ஒருவர் முதலமைச்சராக வருவதற்கு தலித் எம்.எல்.ஏ-க்களே எதிர்ப்பு தெரிவித்தனர். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக தேர்ந்தெடுப்பதற்கு முன்பு சபாநாயகராக இருந்த தனபாலை முதலமைச்சராக ஆக்கலாம் என்று நான் சசிகலாவிடம் கூறி, முன்மொழிந்தேன். அப்போது அதற்கு திருமாவளவன் உள்ளிட்டோர் வரவேற்றனர். ஆனால், 35 தலித் எம்.எல்.ஏ-க்கள் அதற்கு ஒத்துவரவில்லை. எதிர்ப்பு தெரிவித்தனர். அ.தி.மு.க ஒருங்கிணைப்பு விரைவில் நடைபெறும். வரும் 2026 -ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்குள் அ.தி.மு.க ஒருங்கிணைப்பு நடந்து விடும்.
தி.மு.க ஒன்றிய அரசோடு 24 மணி நேரமும் மோதல் போக்கை கடைபிடித்து வருவதால் நிதிகள் வருவது இல்லை. மோதல் போக்கை கைவிட்டு நிர்வாகரீதியாக சமூகமான முறையை தமிழ்நாடு அரசு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால், பாதிக்கப்படுவது மக்கள் தான். ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே நடக்கும் போட்டியால் என்னைப் போன்ற கல்வியாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எடப்பாடிக்கு அட்வைஸ் செய்ற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. அவர் என்னை விட சீனியர். எடப்பாடி பழனிசாமி உள்ளடக்கிய அ.தி.மு.க ஒருங்கிணைப்பு தான் நடக்கும்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88