10 மணி நேரத்தில் 19,256 சதுர அடி Water Proofing… ஆச்சர்யத்தில் ஆழ்த்திய `பில்டிங் டாக்டர்’!

பழைய கட்டுமானங்களுக்கு பழுது நீக்கம், வாட்டர் ப்ரூஃபிங் மற்றும் புதிதாக கட்டும் கட்டுமானங்களுக்கு வாட்டர் ப்ரூஃபிங் செய்வது தொடர்பான 85- க்கும் மேற்பட்ட பொருட்களைத் தயாரிப்பது மட்டுமில்லாமல், அந்த பணிகளையும் செய்து கொடுக்கும் நிறுவனம்தான் பில்டிங் டாக்டர். இந்த நிறுவனத்தின் நிறுவனர் ஆதன் யோகி.

கடந்த 11 ஆண்டுகளாக மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் இந்நிறுவனம் வேகமாக வளர்ந்து வரும் ஸ்டார்ட்-அப் பிராண்டாக மட்டுமில்லாமல் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட நிறுவனமாகவும் செயல்படுகிறது. தமிழகம் முழுவதும் 45-க்கும் மேற்பட்ட ஃப்ரான்சைஸிஸ்களை கொண்டுள்ள இந்நிறுவனம் அண்மையில் அவர்களின் துறை சார்ந்த சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது.

உலக சாதனை!

Water Proofing

கிராமத்திலிருந்து பதினைந்து பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் இயந்திரங்களைப் பயன்படுத்தி எளிய முறையில் வேலை செய்யும் பயிற்சியை வழங்கி வருகிறது பில்டிங் டாக்டர். அந்தப் பயிற்சியின் விளைவாக பில்டிங் டாக்டர் நிறுவனத்திற்கு புதிய நம்பிக்கை கிடைத்தது. அதை பறைசாற்றும் விதமாக அவர்களை முன்னிறுத்தி உலக சாதனை ஒன்றை பில்டிங் டாக்டர் நிறுவனம் நிகழ்த்தியுள்ளது.

பல நாட்கள் செய்ய வேண்டிய ஒரு பள்ளிக் கட்டிடத்தின் வேலையை வெறும் பத்தே மணி நேரத்தில், பத்து பெண் பணியாளர்களைப் பயன்படுத்தி, பத்தாயிரம் சதுர அடி வாட்டர் ப்ரூஃபிங் செய்து விட வேண்டும் என்பது தான் அந்த சாதனை. ஆனால் இறுதியாக சாதனையினுள் ஒரு சாதனையை நிகழ்த்தும் விதமாக அவர்கள் 19,256 சதுர அடி பரப்புக்கு வாட்டர் ப்ரூஃபிங் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

மாண்புமிகு மகளிர் விருது!

மேலும் தமிழகமெங்கும் சிறப்பாக தொழில் முனைவு செய்து வரும் கட்டுமானத்துறை சார்ந்த பெண் தொழில் முனைவோர் 150 நபர்களை தேர்வு செய்து, அதில் 10 பேருக்கு ‘மாண்புமிகு மகளிர் விருது’ அண்மையில் பில்டிங் டாக்டர் நிறுவனத்தின் தலைமை இடமான மயிலாடுதுறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.

கல்லூரி மாணவர்களுக்கான திட்டம்!

சிவில் இன்ஜினியர் படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கான புராஜெக்ட்களுக்கு தேவைப்படும் கெமிக்கல்களை இலவசமாக வழங்கி வழிகாட்டுகிறது. மேலும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி கட்டுமான துறை சார்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருபவர்களுக்கு ‘BEST INFRA INFLUENCER AWARD’ வழங்குதல், அதுமட்டுமில்லாமல், கொரோனா காலக்கட்டத்தில் உறங்கிக் கொண்டிருந்த சிவில் இன்ஜினீயர்களை ஊக்குவிக்கும் விதமாக ‘வா பொறியாளா’ என்ற தலைப்பில் உலகிலேயே முதல் முறையாக சிவில் இன்ஜினீயருக்கான பாடலை வெளியிட்டது. இந்த பாடல் `வேலையில்லா பட்டதாரி’ படத்தின் பாடல்களுக்குப் பிறகு சிவில் இன்ஜினியர்களின்‌‍ ‌‌வாழ்க்கையை விளக்கும் பாடலாக உள்ளது. மேலும் சுதந்திரப் போராட்டத்தில் கட்டுமான துறையின் பங்கை விளக்கும் விதமாக, கட்டுமானக் கருவிகளைப் பயன்படுத்தும் போது வரும் ஓசையை வைத்து தேசிய கீத இசை பாடல் வெளியிடுதல் போன்ற பல்வேறு முன்னெடுப்புகளை பில்டிங் டாக்டர் நிறுவனம் முன்னெடுத்துள்ளது.

பெண்களை முன்னிலைப்படுத்துதல்..!

கட்டுமானத் துறையில் பொதுவாகவே ஆண்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். இதில் மாற்றத்தை ஏற்படுத்த எண்ணிய பில்டிங் டாக்டர் பெண்களுக்கு முக்கியத்துவமும், முன்னேற்றமும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இரண்டு விஷயங்களை கையில் எடுத்துள்ளது. அதில் ஒன்று கிராமங்களில் 200-க்கும் 300-க்கும் சித்தாள் வேலைக்கு செல்லும் பெண்மணிகளின் நிலையை மாற்ற, தொழில் சார்ந்த பெண் பணியாளர்களை பயிற்சி அளித்து Applicators-ஆக உருவாக்கியுள்ளது.

வேலையா… தொழிலா?!

‘சம்பளத்திற்கு வேலை செய்வது சிறந்ததா, தொழில் தொடங்குவது சிறந்ததா’ என்று அவரிடம் கேட்டதற்கு, “வேலைக்குச் செல்வதோ, இல்லை தொழில் தொடங்குவதோ எதுவாக இருந்தாலும் அது அவரவரது தனிப்பட்ட விருப்பங்களையும், தேவைகளையும் சார்ந்தது. ஆனால் எதை செய்தாலும் அதில் சமூகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். நம் பணிகள் சமூகத்தின் வளர்ச்சிக்கு பயன்படும்படி இருக்க வேண்டும். மேலும் நாம் எந்த இடத்தில் இருக்கிறோமோ அங்கு நாம் சிறந்தவாரக இருக்க வேண்டும். அது வேலையாக இருந்தாலும் சரி, தொழிலாக இருந்தாலும் சரி தலைமை பொறுப்பில் இருக்கும் அளவிற்கு திறன்களை வளர்த்து சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும்” என்றார்.

ஆதன் யோகி, நிறுவனர், பில்டிங் டாக்டர்

பணமும், நேரமும்!

பணம் மற்றும் நேரத்தை எப்படி சரியாக பயன்படுத்துவது என்பது குறித்து அவர் கூறியதாவது, “பணம் மற்றும் நேரம் இரண்டுமே வாழ்க்கைக்கும் சரி, தொழில் தொடங்குவதிலும் சரி முக்கியமான ஒரு பங்கை ஆற்றுகிறது. ஆரம்ப காலத்தில் எனக்கும் நேரத்தையும் பணத்தையும் கையாள்வது சிறிது கடினமாகதான் இருந்தது. தேவையில்லாத ஆடம்பர செலவுகள் மற்றும் நேரத்தை செலவிடுவதை தவிர்த்தல் வேண்டும். பணத்தை எப்படி, எந்த நோக்கத்திற்காக பயன்படுத்த வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும். மேலும் ஒரு நேரத்தில் ஒரு செயலின் மீது மட்டும் கவனம் செலுத்தி அந்த வேலையை முடிக்க வேண்டும். உதாரணமாக வேலைக்குச் செல்லும்போது தொழில் துவங்கலாம் என்று எண்ணுவது அல்லது தொழில் தொடங்கிய பின் ஏதேனும் ஒரு வேலைக்குச் செல்வோம் என்று நினைப்பது தவறு. ஏதேனும் ஒன்றின் மீது கவனத்தைச் செலுத்தி எதைச் செய்தால் வளர முடியும் என்பதை அறிந்து அதற்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும்” என்றார்.